Sunday, September 25, 2011

எழுத்தாளர் எஸ்.ராமகிருஷ்ணன்..

இன்று ஞாயிற்றுக்கிழமை ... மாலை மணி 4 .30 க்கு திருப்பூர் அரோமா ஹோட்டலில் பிரபல எழுத்தாளர் எஸ்.ராமகிருஷ்ணன் அவர்களை நேர்காணல் நிகழ்ச்சியில் சந்திக்கிற வாய்ப்புக் கிடைத்தது.... 

மிகவும் அற்புதமான நிகழ்வாக இருந்தது... 3 மணி நேரம் நழுவியது தெரியாத லாவகம்... இன்னும் சில மணி நேரங்கள் தொடர்ந்திருந்தாலுமே கூட நழுவுவது தெரியாத ரம்மியமாக இருந்தது அவர் பேசியது... 

அவரது படைப்புகள் எனக்கு பரிச்சயம் இல்லாத காரணத்தால் அவரிடம் எது பற்றி கேட்பதென்கிற தெளிவின்றி எதுவும் கேட்காமல் கேட்பவர்களையும், அதற்கான அவரது நாசுக்கான பதில்களையும் ரசித்துக்கொண்டிருந்தேன்...
மேற்கொண்டாவது அவரது படைப்புகளை வாசித்துப் பார்க்கவேண்டும் என்கிற அவா பிறந்தது...

இப்படித்தான் எவ்வளவோ நல்ல எழுத்தாளர்களின் எழுத்துக்கள் அடையாளம் தெரியாத அனாமதேயத்தில், அசந்தர்ப்பமாகக் கூட அறிமுகம் ஆகாமல் விரயமாகி விடுகிற விபரீதங்கள் அநேகம் நேர்ந்து விடுவதுண்டு...

நல்ல வேலையாக என் நண்பர் ரவி அவர்கள் சொன்ன தகவலின் அடிப்படையில் நான் விஜயம் செய்து மாலைப்பொழுதை சோலைப் பொழுதாக்கி மகிழ்ந்தேன்...ஆனால் ரவி அவர்கள் ஏதோ காரியம் நிமித்தம் நிகழ்ச்சிக்கு வர இயலவில்லை..

தேசாந்திரியாக ஊர் சுற்றுகிற தன்மையை அவர் விவரித்த விதம் அபரிமிதமான சுவாரஸ்யமாக இருந்தது... ஏற்பாடு செய்திருந்த இயக்கத்தின் இலக்கிய ரசனை மெய் சிலிர்க்கச் செய்தது...

இப்படியெல்லாம் அங்கங்கே கூட்டங்கள் நிகழ்ந்த வண்ணமே உள்ளன... தகவல் பரிமாற்றம் இல்லாமல் யாவும் தவறி விடுகின்றன... பொன்னாகக் கழிய வேண்டிய மணித்துளிகள் பொறுப்பற்றுக் கழியவிழைகின்றன...

எஸ்.ராமகிருஷ்ணன் அவர்கட்கு தாகூர் விருது கிடைத்ததாக அறிவித்திருந்தார்கள்..அது மிகவும் உயரிய விருது, உலக நாடுகள் தோறும் அவரது எழுத்துக்கள் அந்தந்த நாட்டின் மொழிகளில் பெயர்வதற்கான வாய்ப்பு அதிகம் உள்ளதாகவும் , பிற்பாடு அது உலக அங்கீகாரம் பெரும் வாய்ப்பும் உள்ளதாக தெரிவித்தார்கள்...அதற்கான முழுத் தகுதியும் உள்ளடங்கிய நபர் தான் அவர் என்பதை உணர்கிறேன்.

6 comments:

  1. //மாலைப்பொழுதை சோலைப் பொழுதாக்கி மகிழ்ந்தேன்//

    வெல்டன் வரிகள்!

    ReplyDelete
  2. கலந்து சிறப்பித்தமைக்கு நன்றி!

    ReplyDelete
  3. /மிகவும் அற்புதமான நிகழ்வாக இருந்தது... 3 மணி நேரம் நழுவியது தெரியாத லாவகம்... இன்னும் சில மணி நேரங்கள் தொடர்ந்திருந்தாலுமே கூட நழுவுவது தெரியாத ரம்மியமாக இருந்தது அவர் பேசியது... /
    நன்றி.. சுந்தரவடிவேலு... நீங்கள் மட்டுமல்ல எல்லோருமே கட்டுண்டு கிடந்ததை கண்டேன்...

    ReplyDelete
  4. எனது பகிர்தலை மதித்து பின்னூட்டம் {comments }கொடுத்த தங்கள் அனைவருக்கும் எனது நன்றிகளைத் தெரிவிக்கிறேன்...

    ReplyDelete
  5. பின்னூட்டம் என்பது எழுதுபவர்களுக்கு பெரிய டானிக்.... நானுமே கூட பலர் எழுதிய நல்ல நல்ல விஷயங்களைப் படித்து சிலிர்த்து... ஆனால் அதற்கான எந்தப் பின்னூட்டங்களும் எழுதுகிற புத்தி இல்லாதவன்.... ஆனால் நான் எழுதியவற்றுக்கு மாத்திரம் எவரேனும் ஏதேனும் சொல்ல வேண்டுமென்று எதிர்பார்ப்பவன்... இந்த என் தன்மைக்கு மன்னிக்கவும்...

    ReplyDelete
  6. அருமையாக பகிர்ந்திருக்கிறீர்கள், நன்றி.

    ReplyDelete

நிகர் ...

உந் தன் நிமித்தம்  "ஒருதலைக் காதலன் " தகுதி எமக்கு  சுலபத்தில் வாய்த்தது..  இருதலைப்படுத்தும்  முஸ்த்தீபு எதுவுமற்று  ஏக்...