Thursday, June 30, 2011

பர்த்டே..

ஜூன் 30.. இன்றெனது பிறந்த நாள்... 
நானும் நடிகை போல வருடம் மறைக்க முயல்கிறேன்..
இந்த மாதத்தின் கடைசி நாள்... ஏதேனும் பிறந்த நாளில் எழுத வேண்டும் என்கிற சோபை...
என் பிறந்த நாளினை அடையாளம் வைத்திருக்கிற ஓர் நான்கைந்து பேர்கள் எனக்கு வாழ்த்து தெரிவித்தனர்... சிலர், ஞாபகம் வைத்திருந்தாலுமே கூட, இவனுக்கெல்லாம் வாழ்த்து சொல்லி பெரிய மனுஷன் ஆக்கினா நம்ம கெளரவம்  என்ன ஆவது என்கிற போக்கில்...
எது எவ்வாறாயினும் பிறந்த நாள் என்பது ஓர் அற்புத உணர்வை மனசெங்கிலும் வியாபிக்க வைக்கிறது என்பதில் மாற்றுக்கருத்துக்கு இடமில்லை..
சிறு பிராயம் தொட்டு இந்த நாற்பத்தி சொச்சம் வயசிலும் பிறந்த நாள் என்பது சிலிர்ப்பை நிகழ்த்தும் வல்லன்மை கொண்டுள்ளது எனில் மிகையன்று...
இன்றைய இருபத்திநாலு மணி நேரங்களுமே நான் பிறந்து கொண்டே இருப்பது போன்ற ஓர் பிரம்மை...
நான் பிறந்தது எந்த ஷணத்தில் என்கிற ஓர் த்ரில்லிங்... 
பிறந்த நாளில் புதுத்துணி அணிந்த காலங்கள் மிக அற்புதம் நிரம்பியவை..
இன்றைய மனநிலையில் ஆயிரம் புதுத்துணிகள் என்னை அலங்கரிக்க தயார் நிலையில் இருந்தாலுமே கூட அன்றைய சிலிர்ப்பு மிஸ்ஸிங்...
ஒவ்வொரு வகை உணர்வில் பிறந்த நாள் கழிந்திருக்கிறது...

இந்தக்காலங்களில் வருகிற பிறந்த நாட்கள், என் ஆயுளை , அதன் எண்ணிக்கைகளை அதிகம் படுத்தி வருகிறதென்கிற அனாவசியமான சிறுபிள்ளைத்தனமான புளகாங்கிதம்...

இந்தக்கால சூழலில் ஒவ்வொரு வருடத்தைக் கடப்பதென்பதும் ஓர் பெரிய சாதனை போல மாயை ஏற்பட்டு வருவது வினோதமே...

விஷ் யு ய ஹாப்பி பர்த்டே டூ மீ......

இப்படி சுயமாக வாழ்த்திக்கொண்ட ஒரு நபரை அடையாளம் காட்ட எந்த வரலாறும் இல்லை...             

2 comments:

நிகர் ...

உந் தன் நிமித்தம்  "ஒருதலைக் காதலன் " தகுதி எமக்கு  சுலபத்தில் வாய்த்தது..  இருதலைப்படுத்தும்  முஸ்த்தீபு எதுவுமற்று  ஏக்...