Tuesday, July 5, 2011

மனிதனை சீரழிக்கிற கோவில்கள்..



கோவில்களுக்கு போகாமல் இருந்தாலே சாமிகள் நம்மைக் காப்பாற்றும் ... வீடு தேடி வந்தாவது...ஆனால் பிரார்த்திக்க என்று கோவில்களுக்குள் நுழைந்து சாமிகளைத்தவிர்த்து , ஆண்கள் பெண்களையும் , பெண்கள் ஆண்களையும் காதலுடனும் காமத்துடனும் .. பார்வைகளைப் பரிமாறிக் கொள்வதும் வாய் விட்டுபபேசிக் கொள்வதும்... உண்மையாகவே பிரார்த்திக்கலாம் என்று வருகிற ஓர் பக்தனைக்கூட நிலை தடுமாற செய்கிறது..அந்த பக்தன் கூட நாளடைவில் புத்தி மாறி.. பக்தி மாறி, பூங்காவாக பாவித்து கோவில்களுக்குள் அலைய விழைகிறான்..
அடிப்படை ஒழுக்கங்களை இழந்து, எந்த பிராந்தியத்தில் என்ன உணர்வுடன் இருக்க வேண்டும் என்கிற சாதாரண தன்மைகளை கூட பொலிவிழக்க செய்து ஓர் ஐந்தறிவு ஜீவன்  போல உலவி வருகிறான் மனிதன் என்பது வேதனையும் வெட்கமும் கொள்ள வேண்டிய விஷயங்கள்....அமைதியோடும் ஆனந்தத்தோடும் மெளனமாக அமர்ந்து தியானம் செய்கிற ஓர் தன்மையை ஒவ்வொரு நபருக்கும் பயிற்றுவிப்பதே இப்போதைய இந்தியாவின் பக்தி மார்க்கத் தேவை...
கோவில்களை நிறுவி கூட்டங்களை சேர்த்து பிரதோஷம் அம்மாவாசை பௌர்ணமி தேய்பிறை அஷ்டமி .. இன்னபிற விசேஷங்களை அனுஷ்டிப்பதென்பது , மனிதனின் வக்கிர புத்திகளுக்கு தீனி போடுகிற சமாச்சாரங்கள் ஆகும்.--இவைகளைத் தவிர்க்கும் பட்சத்தில்...கோவில்கள் வெறிச்சோடிக் கிடக்கும், வேதமறிந்த குருக்கள் புவாவுக்கு தகிடதத்தோம் போடவேண்டி வரும்...ஆனால் பொது மனித குலங்களின் ஒழுக்கம் மேலோங்கி விடும்...ஆனால்--எந்தக்காலத்திலும் இப்படி எல்லாம் இனி நடக்க வாய்ப்பே இல்லை என்பது திண்ணம்...ஆனால் இவ்விதம் நடக்கிற பட்சத்தில் திரேதயுகம் மறுபடி புதுப்பிக்கப்படும்...
ஆனால் கலியுகம்---- வசீகரிக்கிற நரகமாகி  விட்டது எல்லாருக்கும்... இதனை விடுத்து எந்த சொர்க்கத்தை அணுகவும் எந்தப்பாமரனும், பணக்காரனும் தயார் நிலையில் இல்லை என்பது தான் நிதரிசனம்...


வி.சுந்தரவடிவேலு...

No comments:

Post a Comment

நிகர் ...

உந் தன் நிமித்தம்  "ஒருதலைக் காதலன் " தகுதி எமக்கு  சுலபத்தில் வாய்த்தது..  இருதலைப்படுத்தும்  முஸ்த்தீபு எதுவுமற்று  ஏக்...