குழந்தையின் மலச்சிக்கல்
நினைக்கையில் நமக்கு
வயிற்றில் பிடுங்கும்..
இசி வெளி வர
அவள் முக்குவதைப்
பார்க்கையில் நமக்கு
அழுகை வரும்...
ஆயி போய் மூன்று
நாட்கள் ஆகியிருக்க...
இன்றைக்கு கண்டிப்பாக
டாக்டரைப் பார்த்தாக வேண்டும்..
இதுக்குப்போய் டாக்டரா
என்று குலவை பாடுகிற
பெரிசுகள்..
ஆசனவாயில் புளிக் கோலினைத்
திணிக்க சொல்கிற சிலர்..
சோப்பு நீர் கரைசல் கொடுக்க
சொல்லி சிலர்..
பழம் காய்கறி கீரை
அன்றாட உணவில் சேர்த்து
வந்தால் போதும்... சிலர்!!
இவை எதனையும்
செய்யாமல் குழந்தை
நிபுணரிடம் சென்றோம்..
ஊசி போட யத்தனித்த
டாக்டரிடம்
பேய் கதறல் என் மகள்..
அழுத கையோடு
மூன்று நாள் இசியையும்
டாக்டர் அறையிலேயே
பீய்ச்சி அடித்துவிட்டாள்..
ஊசியை புறக்கணித்து
விடுவார்களோ என்கிற
பயம் டாக்டரிடம்...
ஆனாலும் இனி அதற்கான
தேவை இல்லை
என்பதும்
அவருக்குத்தெரிகிறது...
போட்டால் அசிங்கம்
என்பதும் புரிகிறது...
குழந்தையை எடுத்துக்
கொண்டு வெளிய வந்த
எங்களிடம் --
கம்பவுண்டர் நெருங்கி
பீஸ் கேட்கிறார்..
எதற்கென்று வினவிய
எங்களிடம் சொல்கிறார்:
--குழந்தையை
பயமுறுத்தி மலச்சிக்கலைப்
போக்குவதும் ஒருவித
சிகிச்சை முறை..'
No comments:
Post a Comment