எவர் மீதான
உணர்வுகளும்
நிரந்தரம் அல்ல...
இவனுக்காக
உயிரையே விடலாம்
என்று கருத வைக்கிற
அதே நண்பனின்
உயிரை
எடுத்தும் விடலாம்
போன்ற ஆத்திரங்களும்
வந்து விடுகிறது....
அவனுக்கு உயிரை
கொடுப்பதோ எடுப்பதோ
எதுவும் நடக்கப்போவதில்லை
என்பது உறுதி ஆனாலும்
அந்த உணர்வின் வீச்சு
நிதர்சனங்களை காட்டிலும்
அமிலம் நிரம்பியதாயுள்ளது....
காழ்ப்புக்கும் காதலுக்கும்
இடையிலான இழை
மிகவும் பலவீனமானது...
-காழ்ப்பைத் தேர்வு
செய்கிற அநாகரீகம்
எவ்வளவு
அவசரப்பட்டு
வந்து விடுகிறதோ
அதே அவசரம்
அன்பைத்தேர்வு செய்வதிலும்
எல்லாருக்கும் வந்து
தான் விடுகிறது ஒரு தருவாயில்..!!
மனிதனுடைய எல்லா தேவைகளுக்கும் இந்த பூமியில் பொருட்களுண்டு ..! ஆனால்-- அவனுடைய பேராசைகளுக்கு மாத்திரம் இந்த பூமியே போதாது..!! -மகாத்மா காந்தியடிகள்
Subscribe to:
Post Comments (Atom)
நிகர் ...
உந் தன் நிமித்தம் "ஒருதலைக் காதலன் " தகுதி எமக்கு சுலபத்தில் வாய்த்தது.. இருதலைப்படுத்தும் முஸ்த்தீபு எதுவுமற்று ஏக்...

-
ப வித்ரம் ததும்பிய உமது யெளவனம்.. ப்ராயங்கள் பற்பல கடந்த பிற்பாடும் என் மனம் விட்டகலா தூரிகையாய் வியாபிக்கிறது.. உமது மெருகில...
-
ஓர் மனைவி தனது கணவனிடத்து யதார்த்தமாகச் சொன்னாள் ..: "நேற்றொரு செய்தி படித்தேன்... பிரபல ஆஸ்பத்திரி ஒன்றில் ஓர் பெண் நோயாளி ஒருத்தி ...
-
பிச் சை எடுப்பதற்கென்று தகுதிகளாக "ஊனங்கள்" நிர்ணயிக்கப் பட்டுள்ளன.. உழைக்க சோம்பி பிச்சை எடுப்பவன் ஏதேனும் ஒரு கட்டத்தில் தோ...
nandraga irukku
ReplyDeletethanks for yr comment ravi..
ReplyDelete