Wednesday, November 4, 2009

ஒ..மனிதா...

மனது மூட நம்பிக்கைகளுக்கு சுலபத்தில் ஆட்கொள்கிறது. ஓர் ஜோலிக்கு மேற்கே போக வேண்டியிருக்கிறது என்றால் கூட கிழக்கே போய் சுற்றி வந்தால் தான் அது உருப்படும் என்பதாக சுலபமாக சென்டிமென்டை உள்வாங்கிக்கொள்கிறது மனது..
இந்த மாதிரியான போக்குகள் அறிவிப்பூர்வமானவர்களிடமும் கூட மையம் கொண்டு விடுவது தான் கொடுமை.. இப்படி detailed ஆக ஒவ்வொன்றிலும் வாழ்ந்து அப்படி என்ன சாதிக்கிறார்கள் இவர்கள் என்கிற எரிச்சல் .. இதையெல்லாம் கவனிக்கிற பகுத்தறிவாளிகளுக்கு..
இதெல்லாம் ஒரு புறமிருக்க, வாஸ்து என்கிற ஓர் நாகரிகமான தவிர்க்க முடியாத பேய், பிச்சைக்காரன் வீடுகளில் துவங்கி குபேரர்கள் வசிக்கிற வீடுகள் வரை உள்ளே புகுந்து ஊடுருவிக்கிடக்கிறது...
அங்கலாய்ப்புகளும் ஆசைகளும் மனிதப்பிறவிக்கு மாத்திரம் மற்ற உயிரினங்களுக்குக்காட்டிலும் சற்று அபரிமிதமாக திணித்து விட்டார் கடவுள் என்றே தோன்றுகிறது...
6 அறிவு வைத்தவன் இன்னும் கொஞ்சம் முட்டாள்தனங்களை தவிர்த்தே படைத்திருக்கலாம். அதற்குள்ளாக இனி கடவுளுக்கு என்ன அவசரமோ?


சுந்தரவடிவேலு..

3 comments:

  1. அதற்குள்ளாக இனி கடவுளுக்கு என்ன அவசரமோ?

    இருக்காறா?

    ReplyDelete
  2. //அங்கலாய்ப்புகளும் ஆசைகளும் மனிதப்பிறவிக்கு மாத்திரம் மற்ற உயிரினங்களுக்குக்காட்டிலும் சற்று அபரிமிதமாக திணித்து விட்டார் கடவுள் என்றே தோன்றுகிறது...//

    சேம் பிளட்

    ReplyDelete
  3. 6 அறிவு வைத்தவன் இன்னும் கொஞ்சம் முட்டாள்தனங்களை தவிர்த்தே படைத்திருக்கலாம். அதற்குள்ளாக இனி கடவுளுக்கு என்ன அவசரமோ?

    ithukku yenga kadavula poyi kutham sollikittu....
    nama attagasampannitu pazhiya avaru perla potturom....

    ReplyDelete

நிகர் ...

உந் தன் நிமித்தம்  "ஒருதலைக் காதலன் " தகுதி எமக்கு  சுலபத்தில் வாய்த்தது..  இருதலைப்படுத்தும்  முஸ்த்தீபு எதுவுமற்று  ஏக்...