பேதங்கள்
எல்லாருக்குமாக
பரிமாறப் பட்டுள்ள இந்த
வாழ்க்கை என்பது
பிரம்மாண்ட பேதம்நிரம்பிய வெண்ணை
சுண்ணாம்பாக உள்ளன..
வெண்ணை வைத்திருப்பவன்
வெற்றிலை போடுகையில்
சுண்ணாம்பு வைத்திருக்கிறவன்
கொடுக்கிறான்..
ஆனால் சுண்ணாம்பு
வைத்திருப்பவன்
பருப்புசாதம் சாப்பிடுகையில்
வெண்ணை வைத்திருப்பவன்
கொடுக்க மறுக்கிறான்..
==============
தொன்று தொட்டு..
'நிலைபெறாமை' என்பதே
நிரந்தரமென்றிருக்க
'நிலையான' என்பதே
நிரந்தரம் போன்று
போராடுகிற மனிதர்கள்..
நேற்றை சரிசெய்ய
மெனக்கெடுதல்..
நாளையைத் தூங்கவைக்க
பொன்தொட்டில் செய்தல்..
இன்றை இப்பொழுதை
குப்பைத் தொட்டியில்
போடுதல்....
கோவணம் கட்டி
மானம் காத்த நாள்தொட்டு
இன்றைய ஆண்டிராய்டு
காலம் வரைக்குமான
மனித சுபாவம் இது.. !!
=====================
நாசுக்குகள்..
"அவருடைய விந்தில்உயிரணுக்கள் இல்லை"
சக தோழிகளிடத்து
மனைவி சொல்வது..
"அவளோட கர்ப்பப் பையில்
என்னவோ கோளாறு"
நண்பர்களிடம்
கணவன் சொல்வது..
குழந்தை இல்லா தம்பதிகள்
பரஸ்பரம் பேசிக் கொள்கையில்
"என்னால தாம்மா
நீ தாய்மை அடையலை "
என்கிறான் கணவன்..
"பிரச்சினை என்கிட்டத் தான்"
என்கிறாள் மனைவி..
.
புரிதலே சிறந்தது...
ReplyDeleteLovely. Thoughtful!
ReplyDeletethanks for watching my blog vijay .. and sure, yr review tonic enhancing my writing mood..
Delete