Sunday, February 2, 2014

புத்தகக் கண்காட்சி...

ரெண்டொரு நாட்கள் முன்னர் எங்கள் ஊரில் நிகழ்ந்து வருகிற புத்தகக் கண்காட்சிக்கு செல்ல நேர்ந்தது..

நூற்றுக் கணக்கான கடைகள் எங்கிலும் அடுக்கி வைக்கப் பெற்றிருந்த லட்சக் கணக்கான புத்தகங்களை  ஆயிரக் கணக்கான பேர்கள் வந்து வந்து தரிசிப்பதை பார்க்கையில் புத்தகங்களின் மீதான மக்களின் பேராதரவை மிகவும் ரசிக்க முடிந்தது..

அவர்களினூடே நானும் புத்தகங்களை ஆர்வமாக மேய அவா கொண்டு மேய்ந்தேன்.. என்னை ஈர்த்த சில புத்தகங்களை எடுத்து அங்கங்கே சில பக்கங்களை நுனிப் புல்  மேய்வது போல மேய்ந்து பொழுதோட்டுவது பேரானந்தம்.. விலை போட்டு வாங்குகிற சாசுவதம் இல்லாத பு.க்களை சற்றே ஆர்வம் சீறிட வாசிக்கிறேன்.. வாங்குகிற சாத்ய விலைகள் உள்ள பு.க்களை "அதான் வாங்கப் போறோமே.. வீட்ல போயி படுத்துட்டே படிச்சுக்கலாம் " என்று அவைகளை வாசிப்பதை தவிர்த்து... ஹிஹி.. வாங்குவதையும் தவிர்த்து மறு கடைக்குத் தாவினேன்..
என் மாதிரியான அற்ப குணம் நிறைந்தவர்கள் பலரையும் என்னால் அடையாளம் காண முடிந்தது.. பாம்பின் கால் பாம்பறியும் என்பதற்கொப்ப..!!

பாதி விலை போட்டு விற்பனை செய்கிற பழைய பு.கடைகளுக்கு சென்று புத்தகம் வாங்கவே பேரம் பேசுகிற சுபாவம் என்னுடையது.. புதிய பு.க்களை முழு விலை போட்டு வாங்குகிற  மனசு எனக்கு இயற்கையாகவே இருந்திருக்கும் பட்சத்தில்.. நிச்சயம் நான் ஓர் பிரம்மாதமான எழுத்தாளனாக ..., ஊக்கமாக உரையாடுகிற உன்னத பேச்சாளனாக மலர்ந்திருக்கும் வாய்ப்பினைப்  பெற்றிருப்பேன்.. ஆனால், எனது இந்த நீச சிந்தனை பொதிந்த இருதயத்தோடு அற்ப வெற்றிகளைக் கூட அடையும் சாத்தியக் கூறுகள் இல்லை என்பதை  சுலபத்தில் அனுமானிக்க நேர்கிறது.. !!

சுயமதிப்பீடு சுயமரியாதை இழப்பதை நான் ஒளிவு மறைவில்லாமல் சொல்லி விடுகிற நாகரீகம் கூட அற்றவனாக ஓர் பிராயத்தில் இருந்தேன். இன்று அவ்விதம் அல்லாமல் பேசுகிற வளர்ச்சி பெற்றுள்ளேன் என்பதை பெருமிதத்தோடு பகிர்ந்து கொள்ள விழைகிறேன்..!

இந்த வளர்ச்சியும் அற்று இன்னும் இந்தக் கேவலத்தை ரகசியமாக்கி என்னை அசிங்கப் படுத்துகிற சிறுமையில் ஆண்டவன் வைக்கவில்லை என்பதை நன்றியோடு உணர்கிறேன்..


4 comments:

  1. உண்மையை சொல்லத்தான் மிக தைரியம் வேண்டும்...

    நல்லதொரு பெருமிதம் ஐயா...

    ReplyDelete
  2. அதையும் மீறி இரண்டொரு புத்தகங்கள் வாங்குவது நலம்...உங்களுக்காக இல்லையென்றாலும் உங்கள் மகுளுக்காகவேனும்..

    ReplyDelete
  3. yes aruna sir. rightly u told .. thank u

    ReplyDelete

நிகர் ...

உந் தன் நிமித்தம்  "ஒருதலைக் காதலன் " தகுதி எமக்கு  சுலபத்தில் வாய்த்தது..  இருதலைப்படுத்தும்  முஸ்த்தீபு எதுவுமற்று  ஏக்...