Wednesday, January 23, 2013

நெரிசல்கள்...

கோவில்களிலும் பேருந்துகளிலும் கூடுகிற கூட்டங்களைப் பார்க்கையில் .... அவைகளைத் தவிர்த்து விடுவதே உத்தமம் என்பதாக மனசுக்குப் படுகிற போதிலும், பேருந்துகளைத் தவிர்த்து இடம் பெயர்வது எங்கனம் என்கிற கேள்வி எழுகிறது.. எவ்ளோ தூரம் வேண்டுமென்றாலும் நான் பைக்கில் பயணிக்க ரெடி என்ற போதிலும் மனைவி அதற்கு ஒத்துழைப்பவளாக இல்லை...

இப்போதைக்கு காரும் இல்லை, பின்னொரு நாளில் அது கைவரப் பெறும் என்பதற்கான உத்திரவாதங்களும் இல்லை... அதையும் தாண்டி காலம் ஓர் காரை எனது வீட்டு வாசலில் நிறுத்தக் கூடுமென்கிற அதிகப் பிரசங்கமான கனவுகள் எனக்கில்லை என்ற போதிலும், மனைவிக்கும் மகளுக்கும் உண்டென்றே கருதுகிறேன்..

சிலரை காலம் வெறுமனே துரத்துவதில் குறியாக உள்ளது... ரோல்ஸ் ராய்ஸ் , மெர்சிடஸ் பெஞ்சு, ஆடி , மீதெல்லாம் குறிவைத்த காலங்கள் உண்டு... இன்றைக்கு இரண்டாம் கையில் ஓர் மாருதி எய்ட் ஹண்ட்ரட் என்பதே கனவுப் பட்டியலில் சேர்ந்துவிட்ட கொடுமை செய்தியை உங்களுக்கெல்லாம் சொல்லி எனது கவுரவத்தை இழக்க வேண்டாமென்று தானிருந்தேன்... "சரி.. நம்ம நாத்தம் தெரிஞ்சா தான் என்ன?" என்கிற ஓர் விட்டேற்றித் தனமும் வெறுப்பும் ஒருங்கே கூடி இங்கே நான் யாவற்றையும் பிதற்ற நேர்கிறது..

ஆனாலும் பாருங்கள்., என்னதான் இப்படி எல்லாம் சொல்வதற்கு நான் முனைந்தாலும் மனதின் அடியாழத்தில்.., மிக மிக அடியாழத்தில்... "கண்டிப்பா வாங்குவமடா காரு.." என்றோர் சிலுவை போன்றோர் நம்பிக்கை அறையப் பட்டிருக்கிறது... வேர்விட்ட அந்த நம்பிக்கையின் நிமித்தம் ஒவ்வொரு நொடியையும் இந்தப் பிரபஞ்சத்தில் என்னை இயக்கிக் கொள்வது சாத்யமாகிறது...

கறாராக , சத்தியமாக , கடவுள் சத்தியமாக எனக்கு காரே இனி வாழ்க்கையில் இல்லை ,.. இல்லவே இல்லை... என்றெல்லாம் உத்திரவாதமாக எந்த சாமியும் வந்து என்னை  சபிக்கவில்லை என்பது உறுதி என்பதை இங்கே உங்களிடமெல்லாம் தெரிவித்துக் கொள்ள மிகவும் கடமைப் பட்டுள்ளேன்...[என்னாங்கடா இது கடமை?]

ஆக , இனி அந்தக் கார் சமாசாரத்தை விட்டொழிப்போம்.. அது கெடக்குது கழுதை.. இந்தக் கூட்ட நெரிசல் விஷயமா அலசுவோம்...

நம்ம மக்கா என்னமா கூட்டம் போடுறாங்க ஒவ்வொரு இடத்திலையும்?.. கல்யாணம்னா கூட்டம், காதுகுத்துன்னா கூட்டம்.., வெத்தலை பாக்கு மாத்த .. உப்பு சர்க்கரை  வாங்க... ஜவுளி அள்ள ... ஹோட்டலில் அந்த அவசரக் கோல இட்டிலி  சாம்பார் சட்டினி..வேகாத சோறு.. வெளங்காத சாம்பார் ரசம்... அதே காசைப் புடிங்கிட்டு இந்த ஹோட்டல் ஆளுங்க பண்ற அலப்பறைக்கு அளவே இல்லை... எக்ஸ்ட்ரா புளி சட்னி கேட்டா கூட "அது கெடயாது" என்று ரத்தக் கொதிப்பை ஏற்றுகிறார்கள்..

இந்தக் கல்யாண கருமாதிக் கூட்டங்களுக்கு ஹோட்டல் பசங்க பண்ற கொடுமை கொஞ்சநஞ்சமல்ல.... பாவம் அதையும் வாரிக் கட்டிக்கிட்டு ஏப்பம் போடுற அப்பாவி ஜனங்களைப் பார்க்கையில் ... "இவனுங்க எல்லாம் வெளங்குவானுகளா? என்று ஓர் சாது கூட சபிக்கக் கூடும்..

தேவையோ தேவை இல்லையோ சலிப்பே இல்லாம நம்ம மக்க கூட்டம் கூடிர்றாங்க... ஊட்டாண்ட அவுட்டிங்ல முக்கிய ஜோலி இருக்கறதா பீலா வுட்டுக்கின்னு  இங்க வந்து பஸ்சுல கோவில்ல கூட்டத்துல சிட்டுங்களை ஒராசிட்டு  சூடேறிப் போறது... அப்புறம் வூட்டுக்குப் போயி .."என்ன தான் மக்களோ.. எதுக்குத் தான் இப்டிக் கூடி நாசமாப் போறாங்களோ"ன்னு சடஞ்சுக்கிறது..

இப்பப் பாருங்க.. நான் போக வேண்டிய இடத்துக்கு நாலஞ்சு பஸ் போயாச்சு.. என்னால ஏற  முடியலை... ஏன்னா, நான் பொதுவா லேடீஸ் சைடு தான் ஏறுவேன்.. அது பொறுக்காத கண்டக்டர் பசங்க, "யோவ் .. பின்னாடி வந்து ஏறுய்யா "ன்னு சட்டம் போட்டான்னா "போய்யா வெண்ணை.. நீயுமாச்சு. ஒன் பஸ்சுமாச்சு " ன்னு இறங்கிடறேன்..

கடேசியா ஒரு பஸ்சுல  ஒரு மவராச  கண்டக்டர் "வெடுக்குன்னு ஏதோ ஒரு பக்கம்  ஏறுங்கய்யா "ன்னு கூவ, அய்யா ஆசையா என்டர் ஆனா ஒரு கெழவி பன்றாயா  அதிகாரம்.. "பொறவுக்கு ஏறது தானே? இங்க வந்து பொம்பள குண்டிக்குள்ளேயே பூந்துக்கொனுமா?" ங்கறா ..
"சும்மா பொத்திட்டு நில்லு பெருசு" என்றொரு மாமேதை நல்லவேளையாக எனக்காகவே  மொழங்குன மாதிரி தேனை வார்த்தாரு ..

ஐயோ .. ஐயோ.. 

Thursday, January 17, 2013

காதலின் சுவடுகள்...

என்னைக் காதல் வசப்படுத்தி பாதித்த எவ்வளவோ பெண்களுக்கு என்னைக் குறித்த தகவல்கள் எந்நாளும் தெரிவிக்கப்பட்டதே இல்லை... ஒருக்கால் எனது காதல் முறையாகத் தெரிவிக்கப் பட்டிருக்கும் பட்சத்தில் அந்தப் பெண் என்னை அணுகி எனது காதலுக்கு ஒப்புதல் அளித்திருக்கமுடியும்... பரஸ்பரம் எங்கள் காதல் செவ்வனே பகிர்ந்து கொள்ளப் பட்டிருக்கக்கூடும்..... காதலின் சுவை உணர்ந்தவனாக, நானும் இவ்வுலகில் ஓர் மகோன்னத அனுபவத்தைப் பெற்றவனாக வலம் வந்திருக்கமுடியும்..!

கவைக்குதவாத வெட்கங்களும் மௌனங்களும், நான் சிறந்து விளங்கி இருக்கவேண்டிய எல்லா தளங்களிலும் என்னை வெறுமனே ஒன்றுமற்றவனாக ஆக்கி யாவற்றையும் அனாவசியத்துக்குப் புதைத்து வைத்திருக்க வேண்டிய விபரீதங்களில் எனது வாழ்நாட்கள் கழிந்தும் கரைந்தும் விட்டன...

இனி மேற்கொண்டு செய்வதற்கோ சொல்வதற்கோ ஒன்றுமில்லை என்றானபோதிலும், ஞாபகங்களாக மனசுள் நிழலாடுகிற அந்த வறண்ட பிராந்தியங்களை இங்கே பதிவிறக்கம் செய்வதில் சிறிது ஆசுவாசம் உணரமுடிகிறது... அதன் நிமித்தமே, இந்தக் "குப்பைகொட்டுகிற" காரியம் நடந்தேறுகிறது....!!

இன்னொரு விஷயத்தையும் என்னால் கற்பனை செய்யாமல் இருக்க முடியவில்லை... அதற்கான சாத்தியக் கூறுகள்  நிச்சயம் இல்லை என்று என்னால் அனுமானிக்க முடிகிறதென்ற போதிலும், அதையும் தாண்டி காலம் என்னை அதிசயப் பட வைத்திருப்பதற்கான வாய்ப்புகள் அமைந்திருக்கும் என்கிற ஊர்ஜிதம்  பிடிவாதமாக எனக்குள் வியாபித்துள்ளது.... அதாகப் பட்டது.----

எனது காதலின் தகவல் எப்படி எந்தப் பெண்களுக்கும் தெரிவிக்கப் படாமல் வாய்த்ததோ , அதே அடிப்படையில் அந்தப் பெண்கள் என்னைக் காதலித்த தகவல்களும் அதே மௌனத்தில் உறைந்து தகவலாற்றுப் போய் விட்டிருக்கலாம் என்பதே அது....!
-இந்த அனுமானம் எனது நெஞ்ஜெலும்புக் கூட்டில் பெருமைகளையும் கவலைகளையும் ஒருசேரத் திணித்து வார்த்தைப் படுத்தவியலாத ஓர் உணர்வை  உருவாக்கி கண்களில் நீர் கசிந்து கன்னங்களில் உருண்டோட செய்கின்றன...!!




Tuesday, January 15, 2013

திரு திண்டுக்கல் தனபால் அவர்கட்கு.. ஒரு விண்ணப்பம்..

திரு திண்டுக்கல் தனபால் அவர்கட்கு.. Dindigul DhanabalanSundara Vadivelu

நான் திருப்பூரிலிருந்து சுந்தரவடிவேலு எழுதுவது.. நலம் .. நலமறிய அவா. 
இப்பவும் எனது அனைத்து இடுகைகளுக்கும் ஏதேனும் பின்னூட்டம் போட்டு வருவதை ஓர் தலையாய கடமையாக மேற்கொண்டு செயல்பட்டு என்னை சிலிர்க்கச் செய்து வந்தீர்..

ஆனால் திடீரென்று காலை வாரிக் கவிழ்ப்பது போல ... எவ்விதத் தகவலும் அற்று ஊமையாக மாறி விட்டீர்.ஒய் திஸ் கொலவெறி ?... 

தங்களின் அற்புத பின்னூட்டங்களால் எழுதுவதில் ஓர் பிரயத்தனத்தைக் கடைபிடித்து வந்தவன், திடுதிப்பென்று தாங்கள் விமரிசிப்பதை நிறுத்தியதை அடுத்து எனக்கு எழுதுவதே போதும் என்பது போலாகிவிட்டது.. தங்களின் ஒரே பின்னூட்டத்தோடு ஜொலித்து வந்த எமது இடுகைகள் அனாதைகளாக மாறி விட்டன.. இன்று எந்தப் பயல்களும் என் எழுத்தை விமரிசித்து எழுதுவதில்லை.. 

நடுக்காட்டில் விடப்பட்டது போல திக்கற்று திணறி மூர்ச்சையாகிக் கிடக்கிற எம்மை , காப்பாற்றுகிற எண்ணம் இருக்கிறதா இல்லையா?.. 

நான் நினைத்தேன்.., இனி வரிசை கட்டி எமது படைப்புகளுக்கு இடுகைகள் வந்து விழும் என்று... ஆனால், இடுகை இட்டு வந்த ஒரே நபரும் எனது சிந்தனைக்கு ஆப்பு வைத்து விடவே, "என்னாங்கடா பொழப்பு இது?" என்று ஓர் சலிப்பும் அசூயையும் தட்டிவிட்டது..

இந்தச் சலிப்புக் கருமாந்திரத்தில் இருந்து தப்பிக்க என்ன தான் வழி என்று யோசிக்கையில் , இந்த விவகாரத்தை சம்பந்தப் பட்ட நபரிடம் தெரிவித்து ஆலோசனை  பெறுவதே சாலச் சிறந்ததென்கிற ஓர் அற்புத தீர்மானத்திற்கு வந்து இப்போது இந்த சபையில் வெட்கத்தை விட்டுக் கேட்கிறேன்.. மறுபடி எமக்குப் பின்னூட்டம் போடுகிற எண்ணம் உள்ளதா இல்லையா திரு.தனபால் அவர்களே... இல்லை எனில் இல்லை என்பதைத் தெரிவிக்க வேண்டுகிறேன். அதைக் காட்டிலும் " ஏன் நிறுத்திவிட்டேன் ?" என்பதைத் தாங்கள் என்னிடம் தெரிவிக்க வேண்டுகிறேன்..

நான் எழுதுவதில் என்ன குறைபாடு கண்டீர்கள்?.. அப்படி தங்களைக் கவர்ந்த வண்ணம் எழுதி வந்த நான் பிற்பாடு ஏன் தாங்கள் வெறுக்கிற வகையில் எழுதத் துணிந்தேன் என்பதைத் தெரிவிக்க வேண்டுகிறேன்.. எப்படி நான் மேற்கொண்டு நடந்து கொள்ளவேண்டும், மறுபடி எழுத்துலகில் அதே விதமான ஜாம்பாவானாக மாறி வலம்வர வேண்டும் என்பதெல்லாம் எனது இப்போதைய பெரும் கனவு..மற்றும் லட்சியம்.. 

எமக்கு மிக ஒத்துழைப்பீர்கள் என்று நம்புகிறேன்.. 


நன்றி அய்யா..

தங்களின் ஆதரவு நாடும்,
பிரபல ப்ளாக் எழுத்தாளன்..
சுந்தரவடிவேலு.....

Monday, January 14, 2013

விகடனுக்கு எழுதி அனுப்பிய கவிதை.. அனுப்பிய நாளிலிருந்து ரெண்டு மாதங்கள் வரைக்கும் வருகிற விகடன் இதழ்களில் பிரசுரமாகிறதா என்று கவனிக்கச் சொன்னார்கள், விகடன் குழுவினர்... அப்படி பிரசுரமாகவில்லை எனில் ஏற்றுக் கொள்ளப் படவில்லை என்று அர்த்தப் படுத்திக் கொள்ளச் சொன்னார்கள்.... அந்த ரெண்டு மாதங்கள் நான் விகடனை கவனிக்கவில்லை, அதில் எனது கவிதை இடம் பெற்றுள்ளதா என்பதையும் நான் கவனிக்கவில்லை..
அதனால் என்ன, விகடன் தவிர்த்துவிட்டால் தவிர்த்துவிட்டுப் போகட்டும், அதான் என்னோட ப்ளாக் இருக்கே... இங்கே என்னோட கோடானு கோடி ரசிகர்கள் குவிஞ்சு கெடக்கறாங்களே .. இனி கமெண்ட்ஸ் மேல கமெண்ட்ஸ் கொட்டித் தீர்ப்பாங்களே...!!

தவிர்க்க முடியாதது 



கண்ணீர் அஞ்சலிப்
போஸ்டரில்
இடம்பெற்ற முகம்
நமக்கு 
அறிமுகமில்லாத 
முகமென்றால்,
-அனாவசியமான 
வெறுமை ஒன்று 
மனசை 
ஆக்கிரமிப்பதை 
ஏனோ தவிர்க்கவே 
முடிவதில்லை..!!


Saturday, January 5, 2013

அந்த அப்பாவி டில்லிப் பெண்

அந்த அப்பாவி டில்லிப் பெண் சம்பவம் கல்வெட்டை விட ஆழப் பதிந்து விட்டன எல்லாரது மனங்களிலும்...
நிச்சயம் அந்த சம்பவம் நிகழ்ந்த அந்தக் கொடூர ஷணங்கள் எல்லாரது மனங்களிலும் ஓர் தவிர்க்க முடியாத கற்பனையாக ஒவ்வொரு விதமாக ஓடிக் கொண்டுதான் இருக்கும்..
தனது இனமெனில், நான்கறிவு ஐந்தறிவு படைத்த மிருகங்கள் கூட ஓர் இரக்கத்தைக் காண்பிக்கிற இவ்வுலகில் ஆறறிவு படைத்த மனித இனம் எப்படி இப்படி ஓர் கேவல செயலைச் செய்தது?

அங்கே இடம்பெற்றிருந்த ஒவ்வொரு பிரஜையும் ஈவிரக்கமற்ற மனோபாவம் கொண்டவர்கள்... பிணத்துடன் கூட உறவு வைக்கத் தயங்காத ஈன ஜென்மங்கள்... பீயைத் தின்று கூட ஏப்பம் விடுகிற பனாதிப் பரதேசிப் பயல்கள்..

%20%28A%20picture%20tribute%20to%20the%20dead%20Delhi%20woman%2C%20who%20was%20repeatedly%20raped%20on%20a%20moving%20bus%20on%20December%2016%20has%20gone%20viral%20on%20Facebook.%29
அதில் ஒரு பயல் பதின் வயதில் உள்ளதாகவும் அவனுக்கு தண்டனை சற்றே மாற்றி அமைக்கவேண்டும் என்றெல்லாம் ஆலோசித்து நேரத்தை அனாவசியமாக விரயம் செய்து வருகிறார்கள்.. 

எவ்வித பாரபட்சங்களும் அற்று இவர்கள் அனைவரும் மிகக் கொடூர முறையில் சாகடிக்கப் படவேண்டும் என்பது எல்லாரது ஒருமித்த கருத்தும் ஆகும்..

கொசுவை நசுக்க "ஜீவகாருண்யம்" பேசுகிற ஓர் சாது கூட , இந்த கற்பழிப்பு கும்பலை சுண்ணாம்புக் கால்வாயில் தூக்கிப் போட்டுக் கொல்ல வேண்டும் என்று ஓர் அனுமானத்தை வைத்திருக்கக் கூடும்..!!

இவர்களுக்கு வக்காலத்து வாங்க வக்கீல் எவனாவது முளைத்தால், அவனது பொண்டாட்டியே அவனுக்கு விஷம் வைத்துவிடுவாள்...


இவர்களுக்கு நரகத்தை நாம் இங்கேயே காட்டிவிடவேண்டும்... இவர்களுக்கு அளிக்கப் படுகிற உயர்ந்த பட்ச தண்டனை, மேற்கொண்டு இவ்வித நடவடிக்கையில் ஈடுபட நினைக்கிற எவனொருவனுக்கும் பெரிய பாடமாக அமையவேண்டும்.. 


நோகாமல் இவர்களை தூக்கிலேற்றி சாகடிப்பதோ, வேறு ஏதாவது மனித நேய அடிப்படையில் ஓர்  இயக்கம் போராடத் துணிவதோ இவர்களது விஷயத்தில் கவைக்கு உதவாது.. 


பொதுமக்களால், அதுவும் கல்லூரிப் பெண்களால் கல்லால் அடித்துக் கொல்லப்  படவேண்டும்... அந்த ஐந்தாறு களவாணிப் பயலகளையும் சேர்த்துக் கொல்லக் கூடாது.. ஒவ்வொருவனாக... அடுத்தது நாம் என்கிற பயத்தில் உறைந்து போய்  நிற்க, ஒவ்வொருவனும் துடித்து துடித்து சாவதை எல்லாருமே  பார்க்கக் காத்திருக்கிறோம்... 


ரோட்டில் செத்துக் கிடக்கிற எலியைப் பார்க்கக் கூட அருவருத்து முகத்தைத் திருப்பிக் கொள்கிற  சுபாவத்திலுள்ள நான்.., இவனுகளை கல்லில் அடித்து சாகடிக்கிற வாய்ப்பை அளித்தால் ஏற்றுக் கொள்கிற மனோதிடத்தில் ஓர் வெறியோடு  இருக்கிறேன்... ஒவ்வொருவரும் இருக்கிறோம்...!


நிகர் ...

உந் தன் நிமித்தம்  "ஒருதலைக் காதலன் " தகுதி எமக்கு  சுலபத்தில் வாய்த்தது..  இருதலைப்படுத்தும்  முஸ்த்தீபு எதுவுமற்று  ஏக்...