Saturday, April 7, 2012

தன்னை உணர்ந்தவன் ஞானி..

எழுதி பிராபல்யம் அடைந்து விடலாம் என்கிற கனவு ... அம்புட்டு சுலபமில்லை மச்சீ என்பது போலஉணர ஓர் குறிப்பிட்ட தருணமாகிறது.. உடனடியாக அவ்விதம் உணர்ந்து வெளியேற அநேகமாக எழுதுகிற எவர்க்கும் வாய்ப்பதில்லை...
எப்படியேனும் பிரமாத எழுத்தாளன் ஆகியே விடலாம் என்கிற மாயை போட்டு புரட்டி எடுத்து விட, அவனும் எதையாச்சும் கிறுக்கிக் கிறுக்கித் தள்ள நேர்கிறது...

அப்புறம் ஓர் இழையில் காலம் ... ''என்னா சாரே இன்னும் தெளியலையா?'' ன்னு மௌனமா ஒரு கேள்வி கேக்கறதைப் புரிஞ்சுக்க ... அதுக்கொரு தனி ஞானம் தேவைப் படுகிறது..
அந்தப் பிரத்யேக ஞானம் இருந்தா மட்டுமே மேற்கொண்டு எழுதாம பொட்டாட்ட வெளியேற முடியும்.. இல்லேன்னா, தொடர்ந்து எதனயாச்சும் சலம்பிக்கினே கெடந்து படிக்கிற எல்லாரும் குண்டியில சிரிக்கிறது கூட புரியாம .. பைஜாமா போட்டுட்டு பந்தா பண்ண வேண்டியது தான்..


எழுதறதுல மட்டுமில்ல.. எல்லா விஷயங்களுமே இப்டித்தான்... தனக்கு இது தான் வரும்னு தன்னைப் புரிஞ்சுக்கறதே பெரிய விஷயமா இருக்கு மனுஷங்களுக்கு... புரிஞ்சுக்கிட்ட பிறகு அதிலிருந்து வெளியேறத் தெரியனும் மொதல்ல... அது தெரியாம சும்மா ஒழப்பிக்கிட்டே கெடந்தா..... கூட இருக்கறவங்களும் காறித் துப்பிடுவாங்க... தன்னம்பிக்கையும் ஓஞ்சு தேஞ்சு போயிடும்...

அப்புறம் சாவகாசமா வர்ற ஞானத்தை வச்சு ஒண்ணுமே பண்ண முடியாத லெவலுக்கு வயசு வாலிபம் எல்லாம் போயி ..... முதுமையும் சோம்பலும் கபளீகரம் செஞ்சிடும்..உன்னோட சூழ்நிலையை..!!

அப்டித்தான் ரொம்பப்பேருக்கு மிக சுலபமா வாழ்க்கையில நடந்துக்கிட்டே வருது... இதெல்லாம் புரிஞ்சு ""காலத்தே பயிர் செய்"" ""காற்றுள்ள போதே தூற்றிக்கொள்"" என்கிற பழமொழிகளுக்கு ஏற்ப நடந்து கொள்கிற சிலரால் மட்டுமே பணம் புகழ் என்று எல்லாமே பெறமுடிகிறது..
பெரும்பாலானவர்கள் தன்னையும் தன் திறன்களையும் அறியாமலே, அல்லது அறிந்துமே கூட அதைப் பிரயோகிக்காமல் , தனக்கு கைவரப்பெறாத விஷயங்களை துஷ்ப்ரயோகம் செய்து ... மண்ணோடு மண்ணாகி விடுகிறார்கள்...


படித்து முடித்து வருகிற மாணவ மாணவிகளைக் கூட அவர்களது விருப்பங்களுக்கு ஏற்ற தொழிலை செய்ய அனுமதியுங்கள், .. முதற்கண் படிப்பதைக் கூட பெற்றோராகிய நீங்கள் திணிக்காமல் ,அவர்களின் விருப்பப் பாடங்களைத் தேர்ந்தெடுக்க அனுமதியுங்கள்... 


புதிதாக நான் எதனையும் சொல்லி விடவில்லை. ஏற்கனவே பற்பலரும் அறிவுறுத்திய  ஓர் சாதாரண விஷயத்தையே நானும் இங்கே முன்வைக்கிறேன்...

ஆனால் முன்னர் சொன்ன மாதிரி... தயை கூர்ந்து எவரும் தனது திறன் எதில் என்று தெரியாமல் காலத்தை விரயம் செய்து கொள்ளாதீர்கள்...


அவ்விதமான பல அனுபவங்களுக்கு நான் ஆளானேன் என்பதால் இதனை உங்கள் அனைவரிடமும் சொல்லக் கடமைப் பட்டுள்ளேன்... நன்றி..




சுந்தரவடிவேலு..




1 comment:

  1. விரும்பினதைப் படிங்க விரும்பினத செய்யுங்கன்னு சொல்றது சுலபம். வாழ்வதற்கு தேவையான பொருள் நாம் விரும்புவதின் மூலம் கொஞ்சமாவது கிடைக்கும் என்றால் விரும்புவதைச் செய்யலாம்.எவ்வளவு திறமையான எழுத்தாளனா இருந்தாலும் அதை நம்பி பிழைப்பு நடத்துவது கஷ்டம்.

    ReplyDelete

நிகர் ...

உந் தன் நிமித்தம்  "ஒருதலைக் காதலன் " தகுதி எமக்கு  சுலபத்தில் வாய்த்தது..  இருதலைப்படுத்தும்  முஸ்த்தீபு எதுவுமற்று  ஏக்...