Sunday, February 5, 2012

ஆசை[கள்]



நிராசைகளின்
பேரிரைச்ச்சல்
மனசெங்கிலும்...

ஆசைகளின் 
நீண்ட பட்டியலில்
விரல் விட்டு
எண்ணும்படியாக
நிறைவேறிய 
சில ஆசைகளெல்லாம் 
பிரக்ஞையில் இல்லை...

நிறைவேறாதவற்றின்
மீதாகத் தான் 
அபரிமித பிரக்ஞை
குவிந்திருக்கிறது...
--அவைகளின்
அயராத இரைச்சல்களே
என்னை ஒட்டுமொத்த
செவிடாக்கும் வல்லன்மை
கொண்டுள்ளன.

புறமிருந்து தரிசிப்பவர்களுக்கு
எனது அமைதியும் மென்மையும்
எவ்வளவு முரணானவை
என்பதை நானே அறிவேன்...!

உலக ஆசைகளினின்று
விலகி நின்று 
பற்றற்று வாழ்தல் வேண்டும்
என்கிற மேன்மையான
சித்தாந்தங்களோடு
வாழ்வைத் துவங்கியதாகவே
கருதுகிறேன்...

ஆனால் நாளடைவில்
எப்படி இப்படி 
புறம்போக்குக்கு எல்லாம்
பட்டா தயாரிக்க
மனசு தாவிற்றோ அறியேன்..

அமைதியான குளத்தின்
சிறு சலனத்தையே
சலிப்பாய் உணர்ந்தவன்  நான்..
---இன்றைக்கு 
எப்படி அவைகளை
சிற்றலைகளாய் ரசிக்கப்
பயிற்றுவிக்கபபட்டேனோ..!?..

---எனக்கே நான்                      
முரணாகப் புரிபடுகிறேன்..!!
!
சுந்தரவடிவேலு..

4 comments:

  1. //நிராசைகளின்
    பேரிரைச்ச்சல்
    மனசெங்கிலும்.//
    நெஞ்சில் அறையும் நிதர்சனமான உண்மை.

    //அமைதியான குளத்தின்
    சிறு சலனத்தையே
    சலிப்பாய் உணர்ந்தவன் நான்..
    ---இன்றைக்கு
    எப்படி அவைகளை
    சிற்றலைகளாய் ரசிக்கப்
    பயிற்றுவிக்கபபட்டேனோ..!?..//
    இப்படித்தான் எல்லாம் பழகிப் போகுமோ?

    தங்கள் உடல் நிலை சரியில்லை என்று கேள்விப்பட்டேன். தாங்கள் விரைவில் குணம் பெற்று வீடு வர பிரார்த்திக்கிறேன்.

    ReplyDelete
  2. //அமைதியான குளத்தின்
    சிறு சலனத்தையே
    சலிப்பாய் உணர்ந்தவன் நான்..
    ---இன்றைக்கு
    எப்படி அவைகளை
    சிற்றலைகளாய் ரசிக்கப்
    பயிற்றுவிக்கபபட்டேனோ..!?..// காலத்தின் கோலம் மாற்றம் என்பது மட்டுமே மாறாதது அருமையாக இருந்தது உங்கள் வரிகள் ......வாழ்த்துக்கள்

    ReplyDelete

நிகர் ...

உந் தன் நிமித்தம்  "ஒருதலைக் காதலன் " தகுதி எமக்கு  சுலபத்தில் வாய்த்தது..  இருதலைப்படுத்தும்  முஸ்த்தீபு எதுவுமற்று  ஏக்...