முந்தைய தேஜஸ் திருப்பூருக்கு என்றைக்குக் கிடைக்கும்? என்கிற கேள்வி, மறுபடி கிடைக்குமா ? என்கிற கேள்வி... கிடைக்கக் கூடிய வாய்ப்பே இல்லையோ? என்கிற சந்தேகக் கேள்வி..
இப்படி கேள்வியின் நாயகனாக விளங்குகிறது இப்போதைய திருப்பூர்...
தீர்மானமாக எவ்வித பதில்களையும் எவராலும் பகிர்ந்தளிக்க முடிவதில்லை என்பதோடு அனுமானமாகக் கூட எதையும் சொல்கிற பொறுமையற்று மௌனித்துக் கிடக்கின்றனர் திருப்பூர் வாசிகள்..
இத்தனை வெறுமையில் சிலரின் அபிப்ராயம், கேட்பவர்களை ரொம்பவே டென்ஷன் ஆக்கக் கூடும்..." இனி என்னவோ அவளவு தான்னு தோணுது"..
ஆனால் இது பரவாயில்லை.. அதாவது, " இன்னும் ஒரு அஞ்சாறு வருஷம் ஆகணும் போல"
எது எவ்வாறாயினும் இப்பவுமே கூட, அங்கங்கே மொய்க்கிற கூட்டங்களை இல்லை என்று சொல்வதற்கில்லை... ஆலாய் பறக்கிற நபர்கள் இன்னும் இருக்கிறார்கள்... அவசரமான காரியமே இல்லை என்ற போதிலும் , நிதானமாகப் போனாலே போதும் என்கிற காரியங்களுக்கே பறந்தடித்துக் கொண்டு ஓடுகிற பேய் மனிதர்களும் உண்டு...
இன்னும் சிலரோ, தலை போகிற காரியங்களுக்கே நின்று நிதானமாக , கண்ணில் பெட்டிக் கடை பட்டால், பொறுமையாக ஒரு தம் இழுத்துவிட்டு... அலுவலகம் நெருங்குகையில் ஓர் அவசரமான பாவனை செய்து விட்டு.., "பயங்கர டிராபிக் சார்".. "பையனை ஸ்கூலில் விட்டுவிட்டு " என்று என்ன இழுவை போட்டு சமாளித்தாலும் , அந்தக் காதில் வாங்கி இந்தக் காதில் விடுமளவுக்கு வாங்கிக் கட்டிக் கொள்வர்.. இல்லை இல்லை.. வாங்கி அவிழ்த்து விடுவர்..
திருப்பூரின் தலையெழுத்தே என்னிடம் தான் உள்ளது போல, ரொம்பவும் எதிர்பார்ப்போடு என்னிடம் கூட சிலர் இந்த ஊரின் நிலவரம் குறித்து கேட்கின்றனர்.., ஏதாவது தேறுமா?.. பழைய நிலைமை வருமா?..
கல்லடி பட்டாலும் கண்ணடி படக்கூடாதுன்னு ஒரு அறிவுப் பூர்வமான , பகுத்தறிவு நிரம்பிய ஓர் பொன்மொழி{?} உள்ளது... அப்படி கண்ணடியில் திருப்பூர் சிதிலமானதாக என் 7 ஆம் அறிவு உணர்கிறது..
தமிழ்நாட்டுல இருக்கற எல்லா ஊர்காரர்களும் திருப்பூர் போனா பொழச்சுக்கலாம் என்கிற ஓர் தீவிர அபிப்ராயத்தில் இங்கே புடைசூழ்ந்த காலம் ஒன்றுண்டு.. இன்றைய சூழலில் அவ்வித அபிப்ராயம் செல்லாத நாலணா காசாகிவிட்டது..
இருந்த போதிலும், அதே நாலணா காசு ஆயிரம் ரூபாயாக மாறிவிடும் சூழல் உருவாகும்.., காலம் அதனை நிகழ்த்தும்...
நம்பிக்கை..நம்பிக்கை... எங்க ஊரை நானே நம்பலைனா அது என்ன பொழப்புங்கோ? ..

நம்புவோம். நம்பிக்கைதானே வாழ்க்கை. இத்தனை வருடங்களில் எப்போதும் இல்லாத தேக்கநிலை. என்று விடியுமோ?
ReplyDelete