Friday, April 8, 2011

தீராததும் ஆறாததும்....

எதையாவது எழுதலாமென்று அமர்கிற போதெல்லாம் உன்னைக்குறித்தே தான் என் சிந்தனைகள் படர்கின்றன என்னையுமறியாமல...
உன்னை மறக்க நினைத்தே.. நினைத்துக்கொண்டிருக்க வேண்டியிருக்கிறது...

--எந்த வகையிலும் பொருந்திப்போகாத என் காதலை .. காதல் என்கிற புனிதத்வம் பொதிந்த வார்த்தையில் குறிப்பிடுவது  அவ்வளவு பொருத்தமானதாக தெரியவில்லை...

--ஏனெனில் ஒரு கால் நீயும் என்னைக்காதலிப்பதாக தெரியப்படுத்தி இருந்தாலுமே கூட அதற்கான எனது ஆளுமை வீரியம் நிரம்பியதாக இருந்திருக்கக் கூடுமா என்பது கேள்விகளும் சந்தேகங்களும் கொண்டவையே...

--என் காதலைக்கூட உன் வசம் நான் திணிக்க வேண்டும் என்கிற எவ்வித பிரயத்தனங்களையும் மேற்கொண்டவன் இல்லை..என் தன்மையை காதல் என்கிற அடையாளமாக நீ புரிந்து கொண்டிருக்க மாட்டாயென்று கூட நான் அனுமானிக்கிறேன்..
-அது ஓர் இனம் புரியாத வீச்சு.., காதலையும் தாண்டிய புனிதத்வமான உணர்வது...அந்த உணர்வினை நிரப்புவது, வார்த்தைகளுக்கு சாத்யப்படாது என்பதோடு, அவ்வித ஓர் உணர்வினை சாதாரண தன்மையில் இருக்கிற எவரும் விளங்கிக்கொள்வது அசாத்தியம் ..

--என் தன்மையில் , அதாவது அந்த உணர்வின் தன்மையில் நீயே  இருந்திருந்தாலும் கூட .. அதனை  நான் அடையாளம் கண்டிருப்பேனா என்பது சந்தேகம் தான்... நானுமே கூட சாதாரண தன்மை கொண்டவன் தான்...

--எனது அந்த உணர்வின் ரகசிய  வீச்சு மாத்திரமே .....
எனது தன்மையை தாண்டிய கதியில் என் வசம் ஒளிந்தும் ஒளிர்ந்தும் கொண்டிருக்கிறது...

சுந்தரவடிவேலு..               

No comments:

Post a Comment

நிகர் ...

உந் தன் நிமித்தம்  "ஒருதலைக் காதலன் " தகுதி எமக்கு  சுலபத்தில் வாய்த்தது..  இருதலைப்படுத்தும்  முஸ்த்தீபு எதுவுமற்று  ஏக்...