Sunday, March 13, 2011

கிழமை குறித்த அவஸ்தைகள்..

சனிக்கிழமையின் 
சாயங்காலம் தான்
ஞாயிற்றுக்கிழமை குறித்த
முழுமையான பிரக்ஞையுள்
மூழ்க வைப்பதாகக்
கருதுகிறேன்...
--பிற்பாடு வருகிற
ஞாயிற்றுக்கிழமை
மதியம் வரை மாத்திரமே
வீரியம் மிக்கதாக... 
சாயங்காலம் சொல்லொணா
பீதி நிரம்பியதாக 
மாறி விடுகிறது 
பெரியவர் சிறியவர்
அனைவருக்கும்...!!

மறுபடி வேலைக்கு
ஆயத்தமாக வேண்டிய
அவஸ்தை பெரியவர்களுக்கு...
பள்ளிக்கூட அவஸ்தை 
சிறார்களுக்கு....

ஆடுகிற கண்ணாமூச்சியில்
கூட ஓர் தொய்வு...
சுலபத்தில் தோற்றுவிடுகிற
விளையாட்டுக்கள்...
இதே பயமும் சோம்பலும்
முந்தைய நாளின் சாயங்காலம்
காணோம்....

நாம் வேறு  வேலைக்கு
செல்ல வேண்டும்.. இந்த
சனியன்களை வேறு ஸ்கூலுக்கு
துரிதப்படுத்த வேண்டும்...
என்னாங்கடா கொடுமை..?

அப்புறம் புதன், வியாழன் 
என்று வருகையில் 
பாதிக் கிணறு தாண்டிய
உணர்வு...
வெள்ளி வருகையில் 
ஓர் மொக்கை சந்தோஷம்...

--சும்மா கிடக்கிற
என் போன்ற அறிவுஜீவிகளுக்கே
நாட்கள் குறித்து 
இத்தனை பிரக்ஞை 
மேலோங்கிக்கிடக்கையில் 
சம்பந்தப் பட்டவர்களுக்கு
சொல்லவும் வேண்டுமா?....?...

.

No comments:

Post a Comment

நிகர் ...

உந் தன் நிமித்தம்  "ஒருதலைக் காதலன் " தகுதி எமக்கு  சுலபத்தில் வாய்த்தது..  இருதலைப்படுத்தும்  முஸ்த்தீபு எதுவுமற்று  ஏக்...