கோவிலுக்குள்
நுழையும் பொழுதே
வெளியே நிறுத்தியிருக்கிற
மொபெட் குறித்தும்
அதனடியே
விடப்பட்டுள்ள .
காலணிகள் குறித்துமான
சிந்தனைகள்...
--ஒற்றை லாக்
மட்டும் போட்டிருக்கிறேன்..,
ரெண்டையும் போட்டிருக்கலாமோ?
--பிய்ந்து போகிற
தருவாயில் இருக்கிற
பழைய செருப்பை
போட்டு வந்திருக்கலாமோ...,
போன வாரம் தான்
வாங்கிய புது ஜோடியை
போட்டு வந்திருக்கிறேன்...
மறுபடி மெனக்கெட்டு
திரும்பிப்போய்
மொபெடின் ரெண்டாவது
லாக்கை போட்டு வந்திருக்கலாம்..
அந்தப்புது ஜோடி செருப்பை
மொபெடின் சைடுகவரில்
செருகி விட்டு வந்திருக்கலாம் ..
இந்த சிந்தனை
ஓட்டங்களின் நடுவே
சுவாமியின் முகம்
ஜ்வலிக்கிற தீபாராதணை...
--புது செருப்பும்
மொபெடும் அப்படியே
இருக்க வேண்டும் என்கிற
பிரார்த்தனையே
பிரதானமாகி விட்டபடியால்
சில நாட்கள்
முன்னர் ஓடிப்போன
மனைவி திரும்ப சீக்கிரம்
வர வேண்டும்
என்கிற பிரார்த்தனை
விட்டுப்போயிற்று...
Nice
ReplyDeleteதங்களைப்பற்றி வலைச்சரத்தில் குறிப்பிட்டுள்ளேன். நேரம் இருக்கும் போது வந்து பார்க்கவும்
ReplyDeleteபாரி தாண்டவமூர்த்தி
http://blogintamil.blogspot.com/2011/03/6.html
thanksப்ளாக் எழுதுகிறவனுக்கு பின்னூட்டங்கள் மிகவும் சுகமானவை... ஜீரோ கமெண்ட்ஸ் என்று பார்க்கையில் வருகிற ஓர் கொடுமையான வெறுமையை , ஒரே ஒரு கமெண்ட் வருகிற போது தகர்த்து விடுகிறது...
ReplyDeleteமிக்க நன்றி... தி.மூர்த்தி அவர்களே, தங்களது வலைப்பூவில் என்னை அடையாளம் காண்பித்திருக்கிற உங்கள் ரசனையை நான் மனப்பூர்வமாக மதிக்கிறேன்.. நன்றி to vijayashanker and pari t.moorthy..