1996 ஆம் வருடம் நான் எழுதிய ஒருபக்கக் கதை.. அரை பக்கம் கூட வராதென்று நினைக்கிறேன்...
அன்புள்ள கதிரேசனுக்கு...
உன் ப்ரிய சுப்பிரமணி எழுதுவது..ரெண்டொரு நாட்கள் முன்பு நீ போட்டிருந்த கடிதம் கிடைத்தது.. உனக்கின்னும் தண்டனைக் காலம் நீட்டித்திருப்பதாக நீ எழுதியிருந்தது எனக்கும் உன் மனைவிக்கும் சற்று வருத்தத்தைத் தந்தது.. உன் மனைவியை தேற்ற நான் மிகவும் பிரயத்தனம் எடுத்துக் கொள்ள வேண்டியாயிற்று..... கடிதம் என் கைக்குக் கிடைத்தும் கூட விவஸ்தை இல்லாமல் சுகந்தியிடம் காண்பித்தது என் கேனத்தனம்... எதற்கும் அடுத்த முறை என்ன தகவலானாலும் என் வீட்டு முகவரிக்கு நீ எழுதவும்..
உன் மனைவி குறித்து நீ எந்த வேதனையும் அடைய வேண்டாம்.. நான் இருக்கிறேன்.. வேண்டிய உதவிகளை செய்து கொடுக்கிறேன்.. நீ திட சித்தத்துடன் இரு கதிரேசா...அடுத்த முறை வேலூர் வருகையில் உன்னை வந்து பார்த்து விட்டு வருகிறேன்..
மற்றவை நேரில்
உன் பிரிய நண்பன் சுப்பிரமணி...
---கதிரேசனாகப்பட்ட எனது நிலவரம் ஓரளவு உங்களுக்கு புரிந்திருக்குமென்று நம்புகிறேன்.. சுப்பிரமணி போன்ற நண்பர்களால் மட்டுமே சிறையில் கூட கொஞ்சம் நிம்மதியோடு இருக்க முடிகிறது... அசந்தர்ப்பமாக நிகழ்ந்த ஓர் கொலைக்கு என்னை சம்பந்தமில்லாமல் கைது செய்தது போதாதென்று தண்டனைக்காலத்தை வேறு அனாவசியத்திற்கு நீட்டித்துக்கொண்டு வேதனைப்படுத்துகிறார்கள்..
எனக்கு மனைவி வாய்த்ததை, நண்பன் வாய்த்ததை .. யாவற்றையும் விலாவாரியாக விளக்க வேண்டுமானால் குறைந்த பட்சம் ஓர் குறுநாவல் போலவாவது சொல்லியாக வேண்டும்.. அதற்கு இந்த ஒற்றைப்பக்கம் போதாது...
--- சற்றும் நான் எதிர்பாராத ஒரு நாளில் --- எனக்கு விடுதலை அறிவிக்கப்பட்டது..
வீடு வந்த போது.. சுப்ரமணியும் என் மனைவியும் தலைமறைவென்ற தகவல்...
--- மறுபடி நான் என் வீட்டிற்குள் சிறைப்பட்டேன்...
மனிதனுடைய எல்லா தேவைகளுக்கும் இந்த பூமியில் பொருட்களுண்டு ..! ஆனால்-- அவனுடைய பேராசைகளுக்கு மாத்திரம் இந்த பூமியே போதாது..!! -மகாத்மா காந்தியடிகள்
Subscribe to:
Post Comments (Atom)
நிகர் ...
உந் தன் நிமித்தம் "ஒருதலைக் காதலன் " தகுதி எமக்கு சுலபத்தில் வாய்த்தது.. இருதலைப்படுத்தும் முஸ்த்தீபு எதுவுமற்று ஏக்...
-
ஓர் மனைவி தனது கணவனிடத்து யதார்த்தமாகச் சொன்னாள் ..: "நேற்றொரு செய்தி படித்தேன்... பிரபல ஆஸ்பத்திரி ஒன்றில் ஓர் பெண் நோயாளி ஒருத்தி ...
-
RX 100 YAMAHA.... 1994 ஆம் ஆண்டு ஜூலை மாதம் வாங்கிய யமஹா ஆர் எக்ஸ் ஹன்றடை நேற்றுத் தான் எக்ஸ் சேஞ் செய்து sz-x என்ற ஓர் யமஹா பைக்கை எடுத்த...
-
பிச் சை எடுப்பதற்கென்று தகுதிகளாக "ஊனங்கள்" நிர்ணயிக்கப் பட்டுள்ளன.. உழைக்க சோம்பி பிச்சை எடுப்பவன் ஏதேனும் ஒரு கட்டத்தில் தோ...
No comments:
Post a Comment