"இன்னும் கொஞ்சம் முயன்றால் சிறப்படையலாம்..."
என்னில் அறிவு வந்துவிட்டது என்று நான் அபிப்ராயித்த பிராயம் தொட்டு நான் செய்கிற அனேக காரியங்களுக்கான அனுமானங்களும் அபிப்ராயங்களும் அறிவுரைகளும் கிட்டத்தட்ட எல்லாரிடமும் இதுவாகத்தான் இருந்து வருகிறது..
ஆனால் நான் எந்தக்கால கட்டத்திலும் அந்த இன்னும் கொஞ்சம் முயல்வதே இல்லை.. அல்லது முயன்றும் அது என் கைவரப் பெறுவதில்லை... அதற்கான திறமைகளும் அதிஷ்டங்களும் சிலருக்குத்தான் சுலபத்தில் வாய்க்கிறது..
எனக்கு அந்த அதிர்ஷ்டம் இல்லை என்று சொல்லி தப்பிக்க விரும்பவில்லை.. அந்தத்திறமையும் இல்லை என்பது தான் யதார்த்தம்..
உழைத்து வருகிற வியர்வைக்கும்
உப்புசத்தில் வருகிற வியர்வைக்கும்
உடல் ரீதியாக எந்த மாறுதல்களும் இருக்க வாய்ப்பில்லை..
ஆனால் மன ரீதியாகவும் உணர்வு ரீதியாகவும் நிறைய மாறுதல்கள் உண்டு..
அதே தன்மையோடு தான் இயல்பான திறமைகளோடு எழுதி பெயரும் புகழும் பெறுபவர்களை ஒப்பிட்டு , என் மாதிரியான கத்துக்குட்டிகள் தனக்கு அது மாதிரி ஏன் வாய்க்கவே இல்லை என்று வீண் அங்கலாய்ப்பு படுவதும் ஆகும்...
நன்றி
மனிதனுடைய எல்லா தேவைகளுக்கும் இந்த பூமியில் பொருட்களுண்டு ..! ஆனால்-- அவனுடைய பேராசைகளுக்கு மாத்திரம் இந்த பூமியே போதாது..!! -மகாத்மா காந்தியடிகள்
Subscribe to:
Post Comments (Atom)
நிகர் ...
உந் தன் நிமித்தம் "ஒருதலைக் காதலன் " தகுதி எமக்கு சுலபத்தில் வாய்த்தது.. இருதலைப்படுத்தும் முஸ்த்தீபு எதுவுமற்று ஏக்...
-
ஓர் மனைவி தனது கணவனிடத்து யதார்த்தமாகச் சொன்னாள் ..: "நேற்றொரு செய்தி படித்தேன்... பிரபல ஆஸ்பத்திரி ஒன்றில் ஓர் பெண் நோயாளி ஒருத்தி ...
-
RX 100 YAMAHA.... 1994 ஆம் ஆண்டு ஜூலை மாதம் வாங்கிய யமஹா ஆர் எக்ஸ் ஹன்றடை நேற்றுத் தான் எக்ஸ் சேஞ் செய்து sz-x என்ற ஓர் யமஹா பைக்கை எடுத்த...
-
பிச் சை எடுப்பதற்கென்று தகுதிகளாக "ஊனங்கள்" நிர்ணயிக்கப் பட்டுள்ளன.. உழைக்க சோம்பி பிச்சை எடுப்பவன் ஏதேனும் ஒரு கட்டத்தில் தோ...
No comments:
Post a Comment