Sunday, June 27, 2010

அழுகி வரும் வேர்கள் .....

மக்கள் தொகை
பெருகி விட்டது...,
ஆனால் மக்கள்
மனசுகள் சுருங்கி              
விட்டன...                    
சுயநலம் என்பது
யதார்த்த நிகழ்வாகி
விட,
பொது நலமிகளை
விநோதமாயும் அந்நியமாயும்
பார்க்கிறார்கள்....

பிரச்சினை தனக்கு
நேர்கையில்
பிறருதவி எதிர்பார்ப்பவர்கள்
பிறர் பிரச்சினைகள்
குறித்து கிஞ்சிற்றும்
பிரக்ஞை அற்று நகர்கிறார்கள்..!!

நம் வீட்டுக்குழந்தைகள்
கூட தொலைக்காட்சிப்
பெட்டிகளையும் கணினிகளையும்
மாத்திரமே உற்ற சிநேகிதர்களாக
வரித்திருக்கின்றன...
கார்ட்டூன் பொம்மைகள்
மீது வைத்துள்ள அக்கறை கூட
உடன் பிறந்த தம்பி தங்கையிடம்
இருக்குமா என்பது சந்தேகமே...
-- இப்படி எலும்பு சதை ரத்தம்
மீதான பாச பந்தங்கள் எல்லாம்
பஞ்சு திணித்த பொம்மைகள் மீதும்
நிழலாடுகிற மாய பிம்பங்களின் மீதுமே

இந்தத்தலைமுறை குழந்தைகளுக்கு..!!
--தொட்டில் பழக்கமே
இப்படி என்கிற போது, சுயநலம்
சகஜமாகி விடுவதும் சகஜம் தானே???



சுந்தரவடிவேலு...

1 comment:

  1. கவீத சூப்பரா கீது மச்சி... எப்டி மச்சி இப்படி எல்லாம் தின்க் பண்றே?.. ஒனக்கு இர்க்கற தெறமைக்கு நீ பாரீன்ல இருக்கணும்.. இங்கன குந்தீகினு இன்னா பண்றே?

    -------------ரொம்ப நாளா ஒரு போஸ்டுக்கும் கூட கமெண்டே வரலே.. அதனால தான் நானே சும்மா டபாய்ச்சு பார்த்தேன்.. இனியாச்சும் எல்லாரும் திருந்தி கமெண்டுபோடட்டும்..

    ReplyDelete

நிகர் ...

உந் தன் நிமித்தம்  "ஒருதலைக் காதலன் " தகுதி எமக்கு  சுலபத்தில் வாய்த்தது..  இருதலைப்படுத்தும்  முஸ்த்தீபு எதுவுமற்று  ஏக்...