கோவை செம்மொழி மாநாடு குறித்து பற்பலரிடமும் பற்பல கருத்துக்கள் நிலவி வருகின்றன... முன்னர் இது குறித்து அவதூறாக பேசி வந்த எனது நண்பன் ஒருவன் இப்போது இந்த மாநாடு குறித்து பெருமை பேசுகிறான். ஓர் அரசாங்கம் இப்படி ஒரு திருவிழா நடத்துகிற யோகியதை கூட அற்று இருக்க வேண்டுமா , ஆகவே இது ஒரு ஆரோக்யமான மாநாடு , நம் மாநிலத்தின் உயர்வுகளை , அதன் தொன்மையான வரலாறுகளை, அன்று பெருவாழ்வு வாழ்ந்து மாண்ட மாமன்னர்கள் குறித்த அற்புதமான பதிவுகளை பறை சாற்றுகின்றன.. இப்போதைய தலைமுறைகள், தமிழின் தமிழர்களின் வீரியத்தை கண்டு உணர்வதற்கான பிரம்மாண்டமான வாய்ப்பென்று அபிப்ராயிக்கிறான்..
அரிசி பருப்பு விலைகளை கட்டுப்படுத்துகிற வக்கற்று ஆடம்பரம் செய்கிற ஒரு அரசாங்கம், கொடுங்கோலாட்சி நடத்திக்கொண்டிருப்பதாக அன்று சீறி சினந்து குதித்தவன் இன்றைய தேதியில் தன் கருத்தை இப்படி மாற்றி சொல்வதன் விபரீதம் புரியாமல் திணற நேர்கிறது..
எத்தனையோ இயற்கைப்பேரழிவுகள் நடக்கின்றன, பல கோடிகள் நஷ்டமாகின்றன, ரயில் விமானம் பேருந்து என்று ஒன்று விடாமல் அன்றாடம் விபத்துக்கள் நிகழ்ந்த வண்ணமுள்ளன, உயிர்சேதம் ஆகின்றன..அவர்கள் குடும்பத்திற்கு நஷ்டஈடு என்று பல கோடிகள் அளித்துதவ வேண்டியுள்ளது, அப்படியெல்லாம் செலவாகிறது.. ஒரு அற்புத விழா நடந்தேற ஆகும் செலவுகள் குறித்து நாம் ஏன் கவலை பட வேண்டும் என்று விளக்கம் சொல்கிறான்..
நேற்று மாநாடு சென்று திரும்பிய பலரும் BC என்றும் AC என்றும் பல கருத்துக்கள் வைத்துள்ளர்கள்.. அதாவது before conference , after conference ...
அந்த பிரம்மாண்டத்தை காண்பதற்கே கண்கள் கோடி வேண்டும் என்றும், வர்ணிக்க வார்த்தைகளே இல்லை என்றும் அரற்றுகிறார்கள்..
அவரையும் இவரையும் அப்படி சொன்னார்கள், இப்படி சொல்கிறார்கள் என்று பிதற்றுகிற நான் ?... நானும் அதே குழப்பங்களில் தான் இருக்கிறேன்..
நாளைக்கு மாநாடு சென்று வந்தால், நானும் இனி அபிப்ராயங்களை மாற்றி கொள்வேன் என்றே தோன்றுகிறது... பார்ப்போம்..
மனிதனுடைய எல்லா தேவைகளுக்கும் இந்த பூமியில் பொருட்களுண்டு ..! ஆனால்-- அவனுடைய பேராசைகளுக்கு மாத்திரம் இந்த பூமியே போதாது..!! -மகாத்மா காந்தியடிகள்
Subscribe to:
Post Comments (Atom)
நிகர் ...
உந் தன் நிமித்தம் "ஒருதலைக் காதலன் " தகுதி எமக்கு சுலபத்தில் வாய்த்தது.. இருதலைப்படுத்தும் முஸ்த்தீபு எதுவுமற்று ஏக்...
-
ஓர் மனைவி தனது கணவனிடத்து யதார்த்தமாகச் சொன்னாள் ..: "நேற்றொரு செய்தி படித்தேன்... பிரபல ஆஸ்பத்திரி ஒன்றில் ஓர் பெண் நோயாளி ஒருத்தி ...
-
RX 100 YAMAHA.... 1994 ஆம் ஆண்டு ஜூலை மாதம் வாங்கிய யமஹா ஆர் எக்ஸ் ஹன்றடை நேற்றுத் தான் எக்ஸ் சேஞ் செய்து sz-x என்ற ஓர் யமஹா பைக்கை எடுத்த...
-
பிச் சை எடுப்பதற்கென்று தகுதிகளாக "ஊனங்கள்" நிர்ணயிக்கப் பட்டுள்ளன.. உழைக்க சோம்பி பிச்சை எடுப்பவன் ஏதேனும் ஒரு கட்டத்தில் தோ...
No comments:
Post a Comment