ந ம து உண்ட மிச்சங்கள் தரையில் சிந்தி சிதறி விடுகையில் .. அதனை நாம் கவனியாமல் விட்டுவிட, எறும்புகள் கவனித்து படை எடுத்து குழாமாக அதனை பசிக்கு சாப்பிட்டுக் கொண்டிருக்கையில் நமது கண்களுக்கு அவை ஒருவித அசூயையும், உடனடியாக அகற்றி விடவேண்டும் என்கிற அவசரங்களும் பிய்த்து உதறக் கூடும்.
ஆனால் சற்றே அவகாசம் ஒதுக்கி, உங்களது 6ஆம் அறிவுக்கு யோசிக்கிற சந்தர்ப்பத்தினை வழங்குங்கள்..
கவனமின்மையோடு நம்மால் சிதறிய உணவது.. ஒன்று, சிதறியதை உடனே கவனித்து அப்புறப் படுத்தி இருக்கவேண்டும்.. இப்போது எறும்புகள் புடைசூழ்ந்து பசியாறிக் கொண்டிருக்கையில் அவைகளைக் கூண்டோடு மருந்திட்டு அல்லது வேறுவிதத்தில் அழித்தெறிந்து விடுவது மிக மிக சுலபம்.. அதற்காக வேறு நம் அகம் திருப்தி கொள்வது எவ்வளவு கேவலம்..!!
தாம் குழாமாக கவனிக்கப் படுகையில் மனிதக் கண்களுக்கு உடனே அழிக்கிற ஆவேசம் வந்து விடுவதை அந்த எறும்புகள் உணர்வதற்கான ஒரு மெமரியை ஏன் இறைவன் நிரப்பாமல் சதி செய்துவிட்டான் என்கிற கோபம் வருகிறது..
கோவிலில் பிரசாதம் விநியோகிக்கையில், அன்னதானம் நிகழ்கையில்.. , சாரை சாரையாக நாம் மாத்திரம் படாத பாடு பட்டு .. என்னவோ பூகம்பம் நிகழ்ந்து ஹெலிக்காப்டரில் இருந்து வீசப் படுகிற பொட்டல சோற்றுக்கு அலைபாய்வது போன்று ஆலாய்ப் பறக்கிறோம்..
அந்த எறும்புகள் பாவம், நாம் சிந்திய பருக்கைகளுக்கு ஒன்று கூடுகையில் நம்முடைய ஆண்மையும் பெண்மையும் எதற்காக அப்படி வீறு கொண்டெழ வேண்டும்?
இத்தனைக்கும் நம்மைப் போன்று சுயநலம் அற்று அவை ஒன்றோடொன்றாக நம்முடைய அந்த அற்ப சிதறல்கள் குறித்து செய்தி பரப்பி எங்கேயோ மேய்பவைகளை ஒன்று திரட்டி வந்து வட்டம் கட்டி பொறுமையாகப் பசியாறுகின்றன..
பிரத்யேகமாக ஒரு இடத்தை ஒதுக்கி அங்கே அன்றாடம் எறும்புகளுக்கு என்று ஏதேனும் உணவுகள் வைப்பதை உங்களுக்கு நீங்களே பயிற்றுவித்து க்
கொள்ளுங்கள்..
சொல்லமுடியாது.. எதிரிகளிடம் உங்களுக்குப் பிரச்சினைகள் நேர்கிற போது, உங்களுக்கு நன்றி செலுத்தும் விதமாக எதிராளியின் ஜட்டி பனியனுக்குள் புகுந்து அவனைத் துவம்சம் செய்து உங்களைக் காப்பாற்றக் கூடும் எறும்புகள்..
No comments:
Post a Comment