நானும் ரௌடி தான்..
தெளிந்தநீர் நிலை போன்று ஒரு தேஜஸ்.. எந்தக் கலங்கலும் அற்று ஆழம் கூட மேற்பரப்பிலிருந்து ஈஸியாக விஷுவலைஸ் ஆனது போன்ற ஒரு திருப்தி இந்தப் படம்..
இப்படி ஒரு நய்யாண்டி ஸ்லாங்கில் பேசி நடிக்கிற வித்தை விஜய் சேதுபதிக்கு செம கெத்து.. மீசை அற்று ஹாண்ட்சம் வழிகிற இன்னசண்ட் முகம்..
நயன்தாராவை அந்தக் கடற்கரையில் கடிந்து கொள்கையில், நயனுக்குக் காது கேட்காது என்பதை மறந்து பேச, பிறகு விசுக்கென்று ஞாபகம் வரவே, 'நான் பேசற போது கொஞ்சம் என்னோட மூஞ்சியப் பாரேன்!' என்கிற கேவல்..
நயன் ரியல்லி ஆசம் ... இன்னா ஒரு 'செவி கேளா' பெர்ஃ பார்மான்ஸ் .. வொண்டர் ..
பழி வாங்குகிற அந்த எனெர்ஜியை முகத்தில் ஸ்லிப் ஆகாமல் வைத்துக் கொண்டு , சான்ஸ் மாட்டுகையில், அந்தக் 'கொல்கிற ' மூர்க்கம் தொலைந்த மென்மை ததும்பும் பெண்மை.. வாவ்.. என்று ரசிக்கத் தூண்டிற்று..
சேதுபதியோடு நட்பு பாராட்டும் பாலாஜி..
ஆளை மாற்றி சுட்டு விட்டு , என்னவோ பிளாக் போர்டில் கிறுக்கி விட்டு அழித்து மறுபடி சுலபமாக சாக்பீஸில் எழுதுவது போன்று அந்த சைலன்சர் ரிவால்வாரில் சுடவேண்டிய நபரை சுட்டு விஜய் சேதுபதிக்கு டிஸ்ப்ளே செய்து காண்பிக்கிற மொட்டை ராஜேந்தரனின் குரூர ஹாஸ்யம் .. 'கெக்கே பிக்கே'வென்று சிரிப்பு முட்டுகிறது..
வாவ்.. என்ன லாவகமாக வில்லத் தனம் பார்த்திபனுக்கு?.. சும்மா தி.நெ .வேலி ஹல்வா வை அலேக்காக வாயில் குதப்பி மற்ற வில்லன்களுக்கு சவால் விடும் நாசுக்கு.. இனி, இதர படங்களில் வில்லன் ரோல் தொடரும் என்றே தோன்றுகிறது..
அனிருதின் இரைச்சல் இல்லா பொருத்த இசை.. ரெண்டொரு ரசிக்கும் படியான மெலடி.. காமெராவை ஆரம்பத்திலேயே சொல்லி விட்டேன் என்று நினைக்கிறேன்..
செம சென்ஸ் டைரக்டர்.. ட்ராக் தொடரட்டும்..
தரமிகு தயாரிப்பில் மறைமுக தனுஷும் மின்னுகிறார்..
நன்றி..

No comments:
Post a Comment