அன்றைய இளையராஜாவின் பாடல்கள் கேட்டு மெய்சிலிர்த்த தலைமுறை நாம். ஆனால் இன்றைய தலைமுறையின் ரசனைகளும் அவர்களுடைய பாடல் தாகங்களும் எரிச்சலும் வருத்தமும் அளிப்பதாக உள்ளன..
அவர்களின் செவிகளுக்கு புத்தம்புதுக் காலை எந்த சுரணைகளையும் கொண்டுவரவில்லை.... ஆனால் ஆரோமலே என்று வாயோயாமல் அலறுகிறார்கள்..
அவர்கள் அணிந்துள்ள அந்தப் பொத்தல் ஜீன்ஸ் போலவே மனசும் .. நேர்த்தியானதைக் கூட கிழித்து விடுகிற ஆற்றல் நிரம்பி வழிகிறார்கள்..
அதே ஆற்றலை தைப்பதிலோ மூடி மறைப்பதிலோ காண்பிக்கிற அக்கறையோ பிரக்ஞையோ அற்று வெறுமே இருக்கிறார்கள்..
ஆனால் யதார்ர்த்தமாக நம் தலைமுறை அவர்களை விமரிசிக்கத் துணிந்தாலோ "வாய மூடு".. "பொத்திக்கிட்டு போறியா?" என்று ப்ரெஷர் ஏற்றுகிறார்கள்..
சரிவர தாடி முடியை வளிக்கக் கூட வக்கில்லாதவனோடு, லிப்ஸ்டிக் நெயில்பாலிஷ் சகிதம் சிலீரென்று இருக்கிற பெண்மணி காதல் உரையாடுகிறாள்..
கூட்டத்தில் அசந்தர்ப்பமாக நாம் உரசிவிட்டால் கூட "ப்ச்" என்று அலுத்துக் கொள்கிற அந்தப் பெண்கள், அந்தக் காதலனின் எந்தத் தீண்டுதலையும் ஏற்றுக் கொள்வதும்.. அந்தத் தீண்டுதலை மிகவும் எதிர்பார்த்துக் கிடப்பதும்..
இப்படி, இசையில் காதலில் என்று அனைத்து தளங்களிலும் அரைவேக்காடாகவும் புகை போட்டுப் பழுத்தவர்கள் போன்றும் தான் புலனாகிறார்களே அன்றி, இயல்பான முதிர்ந்த தன்மையே அவர்களை சற்றும் அணுகுவதில்லையோ அல்லது இவர்கள் அணுக விடுவதில்லையோ என்றெல்லாம் யோசிக்கிற சாவகாசத்தில் இருக்கின்றன நமது தலைமுறை..
"ஹே பெருசு.. ஓனக்கென்னவோ டைம்ல சனி என்ட்ரி ஆயிட்ட மாதிரி தெரியுது"
அவர்களுடைய அந்த வன்ம வார்த்தைகள் நம் மனதுகளைக் கூட அந்தப் பொத்தல் ஜீன்ஸ் போன்று கிழித்து விடுகின்றன.. !!
சரி தான்... கொடுமை தான்...
ReplyDelete