Friday, April 10, 2015

அந்தி...................

முக வரவேற்பு 
அறையில் 
வயோதிகச் சுருக்கங்களை
மனசே இல்லாமல் 
வரவேற்க நிற்கிறது 
இளமைப் பொலிவு.. 

அழையா விருந்தாளியாக 
வெட்கமே அற்று 
வருகிறது முதுமை.. 

பௌருஷம் பருத்து 
தேஜஸாகக் காணப் பட்ட 
அந்த அழகிய வெள்ளாமை 
முகத்தின் நடுவே 
ஊடுபயிராக.. இல்லை இல்லை.. 
களையாகத் துவங்கி விட்டன 
பாழ் சுருக்கங்கள்.. 


எத்தனையோ களிம்புகளைத் 
தடவி.. பிடுங்கி எறியப் 
பிரயத்தனித்தாயிற்று..!

சற்றே புரையோடியதாக 
ஓர் மாயையைத் தோற்றுவித்துவிட்டு 
மறுபடி அதன் ஆளுமையை 
வீறு கொண்டு காண்பிக்கின்றன 
சுருக்கங்கள்.. 

எத்தனை விரட்டினாலும் 
நன்றியுள்ள நாய் போன்று 
வந்து வந்து நக்குகின்றன 
முதுமை நம்மை.. 

அடர்ந்த கருமுடியினுள் 
திடீரென்று ஒரு நாள் 
அகப்பட்ட ஒற்றை 
வெள்ளைமுடி 
அன்றெல்லாம் அதிசயமாக 
உணரப் பட்டு 
அதே மயிரிழையில் கவலையும் 
மனசைத் தொற்றிக் கொண்டு.. 

பிறகு வெகுவிரைவிலேயே 
நரைத்த முடிகள் நடுவே 
கறுப்புமுடி கண்டு 
ஆறுதலடைகிற சுலபத்திற்கு 
வந்துவிட முடிகிறது நம்மால்.. !!

2 comments:

  1. முதுமையும் ஒரு வரம் தான்...

    ReplyDelete
  2. வரம் ok தான் பாஸ்.. பட், அது என்ட்ரி ஆகிற போது ஒரு மெல்லிய கவலை மனசைப் பிசைவதை எவரேனும் இல்லை என்று சொல்லிவிட முடியுமா என்ன?. அப்படி சொன்னால், அது பொய்யன்றி வேறென்ன??

    ReplyDelete

நிகர் ...

உந் தன் நிமித்தம்  "ஒருதலைக் காதலன் " தகுதி எமக்கு  சுலபத்தில் வாய்த்தது..  இருதலைப்படுத்தும்  முஸ்த்தீபு எதுவுமற்று  ஏக்...