ஒரு எளிய
மனிதன் சிந்திப்பது
கூட 'கவிதை' யாகலாம்..
ஆனால்,
ஒரு பிரபல கவிஞனின்
வெறுமை ஒருக்காலும்
கவிதையாகாது .. !!
ஆனால்
புனைகிற ஆற்றலற்ற
எளியவனின் சிந்தனை
ஒரு நல்ல
கவிதையாக மலர
சாத்யமற்றுப் போகலாம்..
அதே வேளையில்
--வெறுமையின்
வெப்பத்தைக் கூட
தனது கவிதைத்
திறனால்
பனிக்கட்டிக்குள்
திணித்து கவிஞன்
படைத்து விடலாம்..!!?
வாழ்க்கையே இப்படித்தான்..
அனுபவங்களின் நிமித்தமாக
அசாத்திய சூழல்கள் கூட
வசப் பட்ட சுலபத்தில் அமைந்து
விடக் கூடும்..
அனுபவமின்மையால்
கிடைக்கப் பெற்ற
அற்புத சந்தர்ப்பங்கள் கூட
கைநழுவிய பழமாக
சேற்றினுள் புதையுண்டு
போக நேரும்.. !!
வாழ்க்கையும் இப்படித்தான்.... அருமை...
ReplyDeletethanks boss....
Delete