Thursday, September 4, 2014

அழகிய அசிங்கம்..

பதின் வயதுகளில்
முளைவிடாத
காதல்,
அரை நூறு
கடக்கவிருக்கையில்
அரும்புகிறது...




காலம் கடந்திருந்த

போதிலும்
காதல் அதன் மெருகில்
குறைவற்றே தான்
ஜொலிக்கிறது..
  

வயோதிகம் என்கிற

உணர்வெல்லாம்
காதலின் முன்னிலையில்
கல்லடிபட்ட நாயாக
ஊளைக் கதறலோடு
ஓடி ஒழிகிறது.




பொருந்தாக் காதலின்
அபஸ்வரம்
அபத்தமாய் புரிபடவில்லை..
மாறாக -- அன்று
விடுபட்டுப் போன
ஓர் உன்னத அனுபவம் இன்று 
நிகழ்வதாக
இங்கே கவிதை உருவெடுக்கிறது.. !!

[எங்காவது  என்னை எதாவது பொண்ணு லவ் பண்றதா நெனச்சுக்காதீங்க.. சத்தியமா நான் மட்டும் தான் ஒரு தலையா நின்னு லவ் பண்றேன்.. சத்தியமா நான்  ஒரே பொண்ணை  மட்டும் லவ் பண்ணலை.. பார்க்கற ஒவ்வொண்ணையும்  லவ் பண்ணிப் பார்க்கறேன், கற்பனையாவே.... 
முதிர்கன்னிய விரும்பற  வெடலைப் பசங்களைப் பத்தி கேள்விப் பட்டிருக்கோம்.. பார்த்திருக்கோம்.. ஆனா முதிர்கண்ணனை எதாச்சும் வெடலைப் பொண்ணுக  ரூட் விட்டதா ஹிஸ்டரி இருக்கா?.. அப்டி ஒரு வரலாற்றை ப் படைக்கத் தான் இந்த ராமன் போராடறான்.. யாராச்சும் என்னோட சீதை கிட்ட  போட்டுக் கொடுத்துடாதீங்க.. ஹிஹி.. ]

2 comments:

  1. ஒரு தலை... ஒருதலையாய் இருக்கும்வரை ஆபத்தில்லை. இருதலையாய் ஆகிவிட்டால் முதல் மரியாதை கதை ஆகிவிடப்போகிறது.

    ReplyDelete
  2. அந்த அளவுக்கெல்லாம் நமக்கு லக் இல்லைங்க பாஸ்.. இதை ஏன் இவ்ளோ உறுதியா சொல்றேன்னா, வயசு, வாலிபம் , நரை இல்லாத கருப்பு, இத்தனை இருந்துமே கூட அசமந்தமாவே இருந்து தொலஞ்சாச்சு.. இப்ப இருக்கற கண்டிஷனுக்கு பொண்டாட்டிய மயக்கவே பாடு படவேண்டி இருக்கு..
    அதையும் மீறி உங்க வாய் முகூர்த்தத்துல எதாச்சும் நல்லது நடந்துச்சுன்னா, "வெட்டி வேறு வாசம். வெடலப் பொண்ணு நேசம்" பாட்டு மனப்பாடம் செஞ்சு வச்சிருக்கேன் பாஸ்..
    பின்னூட்டத்துக்கு நன்றி பாஸ்..

    ReplyDelete

நிகர் ...

உந் தன் நிமித்தம்  "ஒருதலைக் காதலன் " தகுதி எமக்கு  சுலபத்தில் வாய்த்தது..  இருதலைப்படுத்தும்  முஸ்த்தீபு எதுவுமற்று  ஏக்...