Tuesday, May 13, 2014

வாக்கிங் ஜாகிங்..

"காலைல வாக்கிங் நெதமும் போறேன்..
போகலைனா நான் போயிடுவேன்.. "...
இதுதான் இன்றைய பற்பலரின் நிலையும்.. உடல் ஆரோக்கியம் என்பது கணித பாடம் போல ஆகிவிட்டது.. [எனக்கு maths வராது.. ஆகவே, அதனைப் பொருட்டாக்கி இங்கே உதாரணப் படுத்தி இருக்கிறேன்.. ஹிஹி..]
நீங்களும் உங்களுக்குக் கடினமான ஒரு விஷயத்தை உதராணப் படுத்தி உங்களது உடல் ஆரோக்கியத்தோடு ஒப்பிட்டுக் கொள்க.. !!

எமக்கு பிரத்யேகமாக ஓர் மைதானத்தை நடப்பதற்கு தேர்ந்தெடுத்து தினசரி நடக்கிற புத்தி இல்லை.. கால் போன போக்கிலே மனதினை செலுத்தி புதிது  புதிதான வீதிகளையும் மக்களையும் கண்களில் அலசி ஆராய்ந்தவாறே நடப்பது எமது அன்றாட வழக்கம்.... என்னையும் அறியாமல் நேற்று கடந்த வீதிகள் வந்துவிடும்.. பார்வைப் பரிச்சயத்தோடு சிலரின் தலையாட்டல்கள்.. ஓர் மெல்லிய புன்னகை.. 

இந்த ஓர் லாவகம் மைதானத்தில் அமைவதில்லை.. செக்குமாடு போல சுற்றி சுற்றி வரவேண்டும்.. அரசியல் சினிமா என்று எதையேனும் வாயோயாமல் பேசியாக வேண்டும்.. நக்கல் நய்யாண்டி செய்யவேண்டும்.. உடன் நடக்கிறவர்களை சுவாரஸ்யப் படுத்த வேண்டும்.. இப்படி இத்யாதி இத்யாதி சம்பவங்கள் உண்டு... இதெல்லாம் எழுதப் படாத ஓர் சட்டம் போல, எல்லா பள்ளி மைதானங்களிலும் கவனித்துப் பார்த்தால் தெரியும்..

அந்த கோதாவில் எனக்கு நண்பர்கள் இல்லை என்ற போதிலும் இந்த பந்தாவை அனுசரிக்கிற நபர்களை தரிசிக்க எனக்கு ஒரு  இனம்புரியா எரிச்சல் படர்கிறது.. ஆகவே, இவர்களைத் தவிர்ப்பது உசிதம் என்கிற எண்ணம்..

ஆதலால் தான் தினமும் தெருத் தெருவாக எனது பிரவேசங்கள்..

"வாக்கிங் போயிட்டு இருக்க இருக்க மயக்கம் போட்டாரு.. தண்ணிய மூஞ்சில தெளிச்சோம்.. முழிச்சாரு .. பேசினாரு.. அப்புறம் பார்த்தா பொசுக்குன்னு போயிட்டாரு.. "

"அழகா ஜாகிங் போயிட்டு தான் இருந்தாரு. திடீர்னு நெஞ்சைப் புடிச்சு அந்தக் கல்லு மேல தான்  ஒக்கார்ந்தாரு .. அப்டியே மயங்கி பின்பக்கமா விழுந்து மண்டைல  அடி.. போயிட்டாரு"

வாக்கிங் ஜாகிங் நல்லது என்கிற முஸ்தீபோடு புறப்படுகிற சிலருக்கு இப்படியும் யதார்த்தமாக நிகழ்வுகள்..

நடப்பதோ ஓடுவதோ அற்று பல வருடங்களாக "காலம்பர சாம்பார் வடை , நெய் தூக்கலா  பொங்கல் " என்று விழுங்கி விழுங்கி 90 நெருங்குகிற எத்தனையோ பேர்களை  நாமெல்லாம் பார்த்துக் கொண்டே தானே வியந்துகொண்டும்.. , ஆனால் நமக்காக நாம் பயந்து கொண்டும் வாழ்ந்து வருகிறோம்? 

2 comments:

நிகர் ...

உந் தன் நிமித்தம்  "ஒருதலைக் காதலன் " தகுதி எமக்கு  சுலபத்தில் வாய்த்தது..  இருதலைப்படுத்தும்  முஸ்த்தீபு எதுவுமற்று  ஏக்...