Saturday, October 20, 2012

வார்த்தைகள் அற்ற கவிஞன்..

வார்த்தைகள்
பிடிபடாமல் ஓர்
நல்ல கவிதை ...
மனசுக்குள்..!

தேடிக் கிடைத்த 
வார்த்தைகள் யாவும்
அந்த உணர்வுகளை
நிரப்புகிற
திறன்கள் அற்றுத்
திணறுகின்றன..!!

ஆகவே
மௌனம் சிறந்ததென்று
முடிவாயிற்று..
என் தனிப்பட்ட
மனசுக்கு அதுசரி...
வாசிப்பவர்கள் உணர
வார்த்தைகள் இட
வேண்டுமல்லவா??

இப்போதைக்கு
முடியாதென்று
சொல்லிப் பார்க்கிறேன்...
"இவ்வளவு தானா
உன் திறன் ?"
ஏளனமாகக் கேட்கின்றன
எல்லாரது கண்களும்..

"அவகாசம் கொடுங்கள்..
அம்சமாக எழுதிவிடுவேன்"
சொல்லிவிட்டு
நழுவித் தொலைகிறேன்..

இப்படி எழுதி
எப்படியோ ஒரு
கவிதை ...
எனது கவிதைகளின்
எண்ணிக்கையில்
கூடிவிட்டது..??!!


4 comments:

  1. ரசித்தேன்... தொடருங்கள்...

    நன்றி...

    ReplyDelete
  2. இனிய நற்வணக்கங்களுடன் சிவஹரி,

    தங்களின் வலைப்பூவினை நான் இன்று வலைச்சரத்தில் அறிமுகப்படுத்திடும் பாக்கியம் கிட்டியிருக்கின்றது என்பதை அக மகிழ்வோடு தெரிவித்துக் கொள்கின்றேன்.

    மேலும் அறிய :http://blogintamil.blogspot.com/2012/10/blog-post_856.html

    ReplyDelete
  3. வலைச்சர அறிமுக வாழ்த்துக்கள்...

    ReplyDelete
  4. கவிதையாய் கவிதை பிறந்த கதை! வாழ்த்துக்கள்!

    ReplyDelete

நிகர் ...

உந் தன் நிமித்தம்  "ஒருதலைக் காதலன் " தகுதி எமக்கு  சுலபத்தில் வாய்த்தது..  இருதலைப்படுத்தும்  முஸ்த்தீபு எதுவுமற்று  ஏக்...