Monday, March 19, 2012

ஓர் சபலிஷ்டின் நடைப் பயிற்சி..



அதிகாலை...
வெளிச்சம் வர
இன்னும் சில
நிமிடங்கள்...
எனது நடைப்
பயிற்சி..வழக்கமாகத்
தெருச் சந்துகளில்...

மனம் போன போக்கில்
கால்கள்...
வீட்டின் பக்கம்
ஓர் ஹை ஸ்கூல்
மைதானம் ஹோவென்று
இருந்த போதிலும்..
-தெருக்களில்
நடை போடுகிற
ஆனந்தம் அலாதி..

அந்த ஹை ஸ்கூல்
அலுத்துப் போனதற்குக்
காரணம்-- சுற்றி சுற்றி
அதையே சுற்றியாக
வேண்டிய அறுவை உணர்வு..
அதையும் தாண்டி
என்றேனும் ஹை ஸ்கூல்
மைதானம் சற்று
சுவாரஸ்யப் படுவதுமுண்டு..
ஏனென்று ஆய்ந்து பார்க்கையில்
எவரேனும் தனது
தொப்பை பெருத்த மனைவியை
இழுத்துக் கொண்டு வந்திருக்கக்
கூடும்.. !!

ஆனால் அதைக்
காட்டிலுமாக ஓர் கிறக்கம்
தன் வாசல்களில்
நீர் தெளிக்கிற, கோலமிடுகிற
பெண்டிர் மீது...
குனிந்து அவர்கள் கோலங்களில்
லயித்திருக்கையில்
என் துரிதநடை தளர்வடையும்...!
அவர்களின் கோலத்தில்
நான் லயித்திருப்பேன்
என்கிற பொய்யை நீங்கள்
நம்பி விடவா போகிறீர்கள்??

இப்படி பல வீதிகள்..
சேலை தென்படாத வீதிகள்
எவ்வளவு நேர்த்தியாக
உள்ளபோதிலும் --
அவைகளில் நான்
நடப்பதில்லை...

துவைப்பதற்கென்று
வெளியே போடப்
பட்டுள்ள சரிவான கற்கள்...
அதே சரிவோடு பெண்கள்..
என்னைப் பார்த்ததும்
மாராப்பை அத்தனை
அவசரமாக சீர்ப்
படுத்துவதைப் பார்த்தால்
"நாம் மட்டும் தான்
ராமனில்லையோ"
என்கிற சந்தேகம் பீறிடும்...

பெண்கள் பாவம்..
தன் அதிகாலைக் கடன்களை
செவ்வனே மெனக்கெட்டு
நிறைவேற்றிக் கொண்டிருக்கையில்
--என் போன்ற 
தடிமாடுகள் .. வாக்கிங் போகிறோம்
என்கிற போர்வையில் 
கண்களால் கற்பழித்துக்
கொண்டிருக்கிறோம்..??



2 comments:

  1. இதுதான் காலங்காத்தாலை நடக்குதா?
    //என்னைப் பார்த்ததும்
    மாராப்பை அத்தனை
    அவசரமாக சீர்ப்
    படுத்துவதைப் பார்த்தால்
    "நாம் மட்டும் தான்
    ராமனில்லையோ"//
    கூட ஆள் வேற சேத்துக்கறீங்க!

    ReplyDelete
  2. இதெல்லாம் கவிதைக் கற்பனை பாஸ்... நெஜம்மா நான் ரொம்ப வேகமா நடக்கற சுபாவம் உள்ளவன்.. எதிர்ல நமீதா வந்தா கூட "அடச்சீ... காலங்காத்தால இந்தக் கழுதையா?" ன்னு அலுத்துட்டு அடுத்த வீதிக்கு ஓடிடுவேன்.... "பொய்யச் சொன்னாலும் பொருத்தமா சொல்றா வெண்ணை" -- ஒயிட் ஹார்ஸ் என் காதுல வந்து கனைக்கிறது கேக்குதுங்கோ..

    ReplyDelete

நிகர் ...

உந் தன் நிமித்தம்  "ஒருதலைக் காதலன் " தகுதி எமக்கு  சுலபத்தில் வாய்த்தது..  இருதலைப்படுத்தும்  முஸ்த்தீபு எதுவுமற்று  ஏக்...