Thursday, June 30, 2011

பர்த்டே..

ஜூன் 30.. இன்றெனது பிறந்த நாள்... 
நானும் நடிகை போல வருடம் மறைக்க முயல்கிறேன்..
இந்த மாதத்தின் கடைசி நாள்... ஏதேனும் பிறந்த நாளில் எழுத வேண்டும் என்கிற சோபை...
என் பிறந்த நாளினை அடையாளம் வைத்திருக்கிற ஓர் நான்கைந்து பேர்கள் எனக்கு வாழ்த்து தெரிவித்தனர்... சிலர், ஞாபகம் வைத்திருந்தாலுமே கூட, இவனுக்கெல்லாம் வாழ்த்து சொல்லி பெரிய மனுஷன் ஆக்கினா நம்ம கெளரவம்  என்ன ஆவது என்கிற போக்கில்...
எது எவ்வாறாயினும் பிறந்த நாள் என்பது ஓர் அற்புத உணர்வை மனசெங்கிலும் வியாபிக்க வைக்கிறது என்பதில் மாற்றுக்கருத்துக்கு இடமில்லை..
சிறு பிராயம் தொட்டு இந்த நாற்பத்தி சொச்சம் வயசிலும் பிறந்த நாள் என்பது சிலிர்ப்பை நிகழ்த்தும் வல்லன்மை கொண்டுள்ளது எனில் மிகையன்று...
இன்றைய இருபத்திநாலு மணி நேரங்களுமே நான் பிறந்து கொண்டே இருப்பது போன்ற ஓர் பிரம்மை...
நான் பிறந்தது எந்த ஷணத்தில் என்கிற ஓர் த்ரில்லிங்... 
பிறந்த நாளில் புதுத்துணி அணிந்த காலங்கள் மிக அற்புதம் நிரம்பியவை..
இன்றைய மனநிலையில் ஆயிரம் புதுத்துணிகள் என்னை அலங்கரிக்க தயார் நிலையில் இருந்தாலுமே கூட அன்றைய சிலிர்ப்பு மிஸ்ஸிங்...
ஒவ்வொரு வகை உணர்வில் பிறந்த நாள் கழிந்திருக்கிறது...

இந்தக்காலங்களில் வருகிற பிறந்த நாட்கள், என் ஆயுளை , அதன் எண்ணிக்கைகளை அதிகம் படுத்தி வருகிறதென்கிற அனாவசியமான சிறுபிள்ளைத்தனமான புளகாங்கிதம்...

இந்தக்கால சூழலில் ஒவ்வொரு வருடத்தைக் கடப்பதென்பதும் ஓர் பெரிய சாதனை போல மாயை ஏற்பட்டு வருவது வினோதமே...

விஷ் யு ய ஹாப்பி பர்த்டே டூ மீ......

இப்படி சுயமாக வாழ்த்திக்கொண்ட ஒரு நபரை அடையாளம் காட்ட எந்த வரலாறும் இல்லை...             

Monday, June 27, 2011

அவன் இவன்.. விமரிசனம்

விண்ணை தாண்டி வருவாயா படத்திற்கு பிறகு திரை அரங்கு சென்று பார்த்த படம், அவன் இவன்..
பாலா படம் .. என்கிற ஒரே நம்பிக்கையில் சென்று பார்த்தால், மிக கேவலமாக இருந்தது படம்..
அருவருப்பான வசனங்கள்... அசூயை கொள்ள வைக்கிற காட்சிகள்...
சம்பந்தமே இல்லாமல், காரெக்டர்களை உள்ளே நுழைத்து .. அவர்களை உதைத்து இம்சிக்கிற காட்சிகள்... உதாரணமாக அந்த மாடுகள் சம்பந்தப்பட்ட திரைக்கதை சற்றும் ஒட்டாத ஒன்று...
அந்த வில்லனும் மனசில் நிற்காத ஒரு சாதாரண முக அமைப்புக்கொண்ட நபர்..

இந்த பாலா படத்தில் எப்பொழுது பார்த்தாலும் காவல்காரர்கள் மிக பலவீனர்களாகவும் கேணத்தனம் நிரம்பியவர்களாகவும், சண்டித்தனம் செய்பவர்களிடம் பயந்து நடுங்குபவர்களாகவுமே சித்தரிக்கப்படுவது ஆரோகியமற்ற ஒரு போக்கு...அது என்ன புத்தி சாலித்தனம் என்று பாலா நினைத்தாரோ அந்த கடவுளுக்கே வெளிச்சம்...

முந்தைய பிதாமகன், நான் கடவுள் படங்கள் எல்லாம் சற்று ரசிக்கவும் பாராட்டவும் உகந்தவைகளாக இருந்தன.. ஆனால், இந்தப்படம் பொதுக்கக்கூசுக்குள் பிரவேசித்து வந்த ஓர் தாங்கொணா அருவருப்பை ஏற்படுத்திவிட்டது... 

உதாரணமாக ஒரு அருவருப்பான வசனத்தை கவனியுங்கள்.. :
விஷாலை தேடி பெண் போலீஸ் வருகிறது..
தன் வாக்கி தாக்கி தொலைந்து விட்டதாகவும், அதனை விஷால் தான் சுட்டு விட்டதாகவும் சந்தேகித்து வந்து கேட்கிறார் அந்த பெண் அதிகாரி..

விஷாலின் அம்மா அம்பிகா விஷாலை அழைக்கிறாள்..
டே வாடா இங்கே.. உனக்கு எப்ப பார்த்தாலும் திங்க, பேல .. திங்க . பேல ... இதே தான் வேலையா? என்று கேட்கிறாள்..

கழுவீட்டு வாடா. அப்படியே வராதே..---- அம்பிகா..
கழுவாம வரதுக்கு நான் என்ன உன் புருஷனா?---- விஷால்..
பிற்பாடு விஷால் சொல்கிறார்.. :
அம்மா. மாவு மாவா போகுதுமா..

அதனை கேட்ட அம்பிகா சொல்கிறார்:
போனா போகுது உட்றா. அதை வச்சு போலிசுக்கு தோசையா சுட்டு தர முடியும்?

--இதனை ஹாசியம் என்று நினைத்து அம்பிகா சிரிக்கிறார்.. பார்க்கிற ரசிகர்கள் அப்படி ஒன்றும் சிரித்ததாக தெரியவில்லை..
இப்படி ஒரு கேவலமான ஹாசியத்தை எப்படி பாலாவால் சிந்திக்க முடிந்தது.. இதனை சென்சார் போர்டு எப்படி அனுமதித்தது..??

பெற்ற தாயிடம் மகன் கேட்கிறான் .. 
எம்மா நீ இந்த பிரா எல்லாம் போட்டுக்கறதே இல்லையா?
அம்மா சொல்கிறாள்: 
இந்த வயசுல அதுக்குத்தான் இனி கொறச்சல்?

இவைகளில் எல்லாம் என்ன ஹாசியம் நாகரீகம் இருக்கிறது?.. காறித்தான் துப்பத்தோன்றுகிறது... 

இதற்கெல்லாம் சப்பை கட்டு கட்டி குமுதமும் விகடனும் விமரிசித்து மதிப்பெண்கள் வேறு கொடுக்கிறது..

இதே அநியாயங்களையும் அனாகரீகங்களையும் மையப்படுத்தி, குப்பைதொட்டி , சுடுகாடு, .. என்று பாலா தொடர்வார் என்றால் இயல்பாகவே அவர் எல்லாராலும் தூக்கி எறியப்படுவார்..

எதார்த்தம் என்கிற போர்வையில் இப்படி அசிங்கங்களையும் ஆபாசங்களையும் வன்முறைகளையும் வெளிச்ச்சமாக்கியே காண்பித்து கொண்டு இருப்பாரே யானால் ... பாலா இயல்பாகவே காணாமல்  போய் விடுவார்... 

இப்படி ஒரு அண்ணன் தம்பி.. இவர்களை காதலிப்பதோ அழகழகான கதாநாயகிகள்... கக்கூஸ் கழுவுவது போன்ற கதாநாயகர்களை சித்தரித்து விட்டு அவர்களுக்கு கல்லூரி செல்கிற அழகுப் பெண்களை காதலிகளாக நியமித்திருப்பது .. எதார்த்தமில்லை, அருவருப்பு...

மனசில் பதியாத டப்பா பாடல்கள், பின்னணி இசை...
இளையராஜாவின் வாரிசாகவே தோன்றவில்லை யுவன் ஷங்கர்..
புலிக்கு பிறந்த பூனை போல இருக்கிறது இசையும் பாடல்களும்..

வீட்டிற்கு வந்து குளித்தே ஆக வேண்டும் போல ஓர் நாற்ற உணர்வு மனசெங்கிலும்...  

Thursday, June 23, 2011

சில நேரங்களில்...

சற்று நேரம்
பேரம் பேசப்பட்டாலும்
விலை போகின்றன
நெல்லிக்காய்கள்...

நீண்ட நேர
பேரத்திலும்
கட்டுபடியாகாத
விலை காரணமாக
குப்பை தொட்டிக்கு
போகின்றன 
அழுகிய ஆப்பிள்கள்..           

Friday, June 17, 2011

ஒட்டு மீசை முறுக்கப்படுகிறது...

எந்த நண்பனையும்
முழுமையாக திருப்தி
கொள்ள முடியவில்லை...
-என் நண்பர்களுக்கு 
நானும்  இதே போல தான்
அதிருப்தியானவனாகவே
புரிபடுவேன்...?

-ஒருக்கால் 
என் போல மற்ற என்
நண்பர்கள் இப்படி
ஏடாகூடமாகவெல்லாம்
அனுமானிக்க மாட்டார்கள்
என்றே தோன்றுகிறது...

எது எவ்வாறாயினும்
என் அனுமானங்களை
கொட்டியாக வேண்டிய
நிர்ப்பந்தம் எனக்கு...!
-இவ்விதம் ஓர் சிந்தனை
வந்தான பிற்பாடு
இதனை ஓரங்கட்டிவிட்டு
மாற்று சிந்தனைகளை
கவிதையாக்கினேனே  யானால்
இந்த சிந்தனை
அனாமதேயமாக என்னுள்
அரற்றிக்கொண்டே கிடக்கும்...

தவறோ சரியோ 
சிந்தித்தவற்றை 
எழுதித்தீர்க்கவில்லை என்றால்
குப்பை தொட்டி போல
நாறத்துவங்கி விடும் மனசு...

என் ரசனைகள் புரியாமல்
தடுமாறுகிற நண்பர்கள்,
புரிந்து பாராட்டுகிற நண்பர்கள்
புரிந்தும் பாராட்ட மனமற்ற நண்பர்கள்
புரியாமலே கூட பாராட்டி விடுகிற நண்பர்கள்...

இவ்வளவு வகையறா
நண்பர்கள் எனக்கு இருப்பதே
என் அதிர்ஷ்டம் என்கிற
சந்தோஷம் ஒரு புறம்...
அவர்களது தன்மைகளை
விமரிசிக்க நேர்கிற சங்கடம்
மறுபுறம்...

முதற்கண் எனக்கே 
என் ரசனைகள் குறித்த
தெளிவான பார்வை இல்லை
என்கிற பரம ரகசியத்தை{?}
உடைபட செய்கிறேன்...

இந்த லட்சணத்தில்
நண்பர்களை எதற்கு
வம்புக்கு இழுக்க வேண்டும்
என்பது தான் 
இந்தக்கவிதையின் 
கேனத்தனம்...                     

Thursday, June 9, 2011

பலவீனமான சபலங்கள்..

ஆபாசங்களை மிகவும்
ரசிக்கிற வியாதி மாதிரி
கேவலமான வியாதி
வேறொன்று இல்லை...

ஓர் பிரத்தியேகமான
பிராயத்தில் தவிர்க்க
அசாத்யமாகி விடுகிறது
அநேகம் பேர்களுக்கு..

இயல்பாகவே சபலங்களின்
பக்கம் சாய்ந்து .. மீள்வதற்கு
அதிக நாட்களாகி விடுகிறது..
அல்லது மீள்வதே இயலாத
கருமமாகி விடுகிறது..

மலரினும் மெல்லிய காமம்
முள்ளாய் கீறியும்
நெருப்பாய் சுட்டும் கூட
அதன் வசீகரம் வதங்கிப்போவதில்லை..

எந்த வீழ்ச்சியும் அனாவசியமாகி
விடுகிறது காமம் மய்யப்படுகையில்...
குற்ற உணர்ச்சிகளும் , தர்ம சங்கடங்களும்
தன் பங்கிற்கு குறுக்கீடுகள் செய்தாலும்
வேசி மார்பில் புதைந்து விடுகிறது
எல்லா நல்லவைகளும்...

இந்த ரசாயனம் தன்வசம்
என்கையில் ரகசியமாக
ரசித்து விட முடிகிறது
சுலபத்தில்... 
இதே ரசாயனம் 
பிறர் வசம் கண்டால்
மாத்திரம்
 கோபம் கொப்பளிக்கிறது
அநியாயமாகப் படுகிறது...

சபலங்கள் அடையாளப்படாத
வரைக்கும் மிகவும் அன்யோன்யமானது..
பிறர் அடையாளம் கண்டுவிட்டாலோ
அதனை சொல்லி விட்டாலோ
வெட்கமும் வேதனையும் சொல்லி மாளாது...

நிகர் ...

உந் தன் நிமித்தம்  "ஒருதலைக் காதலன் " தகுதி எமக்கு  சுலபத்தில் வாய்த்தது..  இருதலைப்படுத்தும்  முஸ்த்தீபு எதுவுமற்று  ஏக்...