Wednesday, May 25, 2011

இனிய நண்பர்களுக்கு...

சத்குரு ஜக்கி வாசுதேவ் அவர்களை நீங்கள் அனைவரும் அறிந்திருக்கக்கூடும்... அவரது மேற்பார்வையிலும், அறிவுறுத்தலின் படியும் ஈஷா யோகா மையம் சில உணவு பண்டங்களை வெளியிடுகிறது.. 
ரசாயனக் கலவைகளோ , பிற செய்கை தன்மைகளோ அதாவது preservatives போன்ற தீங்கு விளைவிக்கிற நச்சுப் பொருள்களோ அறவே அற்று இயற்கை முறையில் அதாவது organic முறையில் அவர்களே பயிரிட்டு தூய்மையின் இலக்கணம் வழுவாமல் மிகத்தரமான ராகி மாவு, சோளம் மாவு, அடை தோசை மாவு, கம்பு மாவு, கம்பங்கூழ் மாவு, மற்றும் இட்லி சாம்பார் பொடி வகைகள், 
தானியங்களில் செய்யப்பட பிஸ்கட்டுகள், சுக்கு காபி மற்றும் தரமான தேன் போன்ற உணவு பொருட்களை தயார் செய்து நம் உடலுக்கும் மனசுக்கும் பரமானந்தத்தை அளித்து வருகிறார்கள்...

அந்தப் பொருட்கள்  அனைத்தையும் பொதுமக்களுக்கு வழங்கும் நோக்கில் அதற்கான விநியோகிக்கிற உரிய்மையை நான் பெற்றுள்ளேன் என்பதை தெரிவிக்க மிகவும் மகிழ்கிறேன்....

தயை கூர்ந்து தங்களுக்கு தேவையான பொருட்களை கீழ்கண்ட எனது செல்போனுக்கு  தொடர்பு கொள்வீர்களாக..

93621 41118  மற்றும்

என் அனாமதேய கவிதை ஒன்று....

வண்டு தானே
பூவைக்குடையும்?...
என் நெஞ்சை
பூ இங்கு குடைகிறதே ...
 
சுகமானதே
இந்த முரண்கள்..
புது ஸ்வரமானதே
எந்தன் முணகல்....

புல்நுனி பனித்துளி
காற்றில் சிதறும்
உன் விழிகளின் வீச்சிலோ
பாறை சிதறும்...

ரத்தின சுருக்கமாய்
உன் இடை இருக்கும்
ரொம்பவே பேசிடும்
உன் மார்புகளும்...

வாய் வெடிக்கப்
பேசுபவன் நான்
எப்பொழுதும்...ஆனால்
வார்த்தைகள் வரவில்லையே
உன்னைக்கண்டதும்...

--சினிமா பாட்டெழுதுகிற சிறு முயற்சி... எழுத எழுத என்னவோ வைரமுத்து, வாலி போல ஆகி விட்டதான உணர்ச்சி... இப்படி கிறுக்கிக் கிழித்துப்போட்ட கவிதைகள் ஏராளம் உண்டு... அப்படி கிழித்துப்போட்ட சில ஞாபகங்களை இன்று பிளாகில் ஒட்ட வைத்து சிலிர்த்துக்கொள்வதில் ஓர் அல்ப ஆத்மதிருப்தி..

--இதற்கு மெட்டுப்போடவோ, இட்டுக்கட்டி பாடவோ இளையராஜாவும் ரஹ்மானும் வரப்போவதில்லை என்பது தெரியும்... ஆனபோதிலும் என்ன, படிக்கிற நாமாவது ராகமாக பாடிப்பார்ப்போமா??       

Tuesday, May 24, 2011

மாறி மாறி தோற்றமளிப்பவை..

என் அஜாக்கிரதையான
தன்மை, மிகுந்த எச்சரிக்கை
உணர்ச்சியோடு 
இருப்பதாகத்தோன்றும்....

என் யதார்த்தமான
தன்மை, 
திட்டம் தீட்டி 
செயல்படுவதாகத்
தோன்றும்...
                                                                    
என் வளைந்து கொடுக்கிற
தன்மை, மிகவும்
நான் இறுகிக்கிடபபதாகத்
தோன்றக்கூடும்...

பரமானந்தத்தில்
நான் கதறி கண்ணீர்
சிந்துவது
ஏதோ சோகங்களுக்காக 
அழுவதாகத்தோன்றும்....

இவ்விதம் எனது
எல்லா மன உணர்வுகளையும்
மாற்றி பிரதிபலித்துக்
காண்பிக்கிற என் முகம்,
என்னை பயித்தியக்காரன்
போல தோன்ற வைக்குமோ??

சுந்தரவடிவேலு...

Sunday, May 22, 2011

my SEEMS TO BE's......

my carelessness 
seems to be "very precaution"...


my casualness
seems to be "very well planned"...


my flexibility
seems to be "extremely rigid"


my tears in ecstasy
seems to be "crying due to agonies"...


every senses of my different reflections
seems to be that "I m mentally ill??" 
lol......


v.sundaravadivelu.

Sunday, May 8, 2011

கிறுக்கல்கள்....

என் மௌனம் பூக்கள் போன்றவை... மணக்குமோ என்னவோ தெரியாது, உத்திரவாதமாக  நாறாது....ஆனால் பேசினாலோ வாய்க்கும் உத்திரவாதம் இல்லை, வார்த்தைகளுக்கும் இல்லை.. எல்லாம் ஒரு சேர நாறக்கூடும்....

இயல்பான மௌனங்கள் வலிமை நிரம்பியது.., ஆனால் விரதம் சார்ந்த மௌனங்கள் செயற்கையான எரிச்சல் ஊட்டுபவை...காறிய சளியை வாய்க்குள்ளேயே வைத்துக்கொண்டு துப்புவதற்கான சந்தர்ப்பமே வாய்க்காமல், மறுபடி நீர்த்துப்போய் வேண்டா வெறுப்பாக விழுங்கி விட வேண்டிய அவஸ்தைகள் விரத மௌனங்கள்.... ஆனால் நினைத்ததை ஆனந்தமாகப்பேசி , தேவையற்றதை தவிர்த்து பேசவே பிடிக்காமல் மௌனிக்கிற மௌனம் தான் யதார்த்தமானது.., அவஸ்தையற்றது...

இப்படி ஒரு கருத்து சமுதாயத்திற்கு சொல்லி ஆகவேண்டிய கட்டாயம் எதுவும் இல்லை... என்னவோ எதையேனும் அவ்வப்போது முணு முணுக்கப்பிடிப்பது போல எதையேனும் கிறுக்கவும் பிடிக்கிறது...slate கிடைக்கப்பெற்றதும் கிறுக்குகிற குழந்தை போல, பேப்பர் பேனா கிடைத்ததும் எழுதாமல் இருக்கவே முடியாத ஒரு வெறி போல .. ப்லோகினை திறந்ததும் கைகள் பரபரக்கின்றன... அர்த்தமாகவோ அனர்த்தமாகவோ எதையோ உளறிக்கிறுக்கி விடுகிற ஒரு சுகம் ... அலாதியானது...!!   


நிகர் ...

உந் தன் நிமித்தம்  "ஒருதலைக் காதலன் " தகுதி எமக்கு  சுலபத்தில் வாய்த்தது..  இருதலைப்படுத்தும்  முஸ்த்தீபு எதுவுமற்று  ஏக்...