Friday, January 21, 2011

நிகழ்.....

இறந்த மற்றும்
எதிர் காலங்கள் 
குறித்தான 
பிரக்ஞைகளிலேயே
அநேகம் பேர்களுடைய                         
வாழ்நாட்கள் கழிந்துவிட
நிகழ்கால ஸ்மரணை
சற்றும் அற்றுத்தான் 
வாழ்ந்து வருகிறோம்...

மெய்ஞானிகளும் 
பொய்ஞானிகளுமே கூட
நிகழ்காலத்தில் வாழ்ந்து
பழகச்சொல்கிறார்கள்...
வாழ்வின் மொத்த சாராம்சங்களும்
நிகழ்காலத்திலேயே 
புதைந்துள்ளதாகவும் 
இறந்த மற்றும் எதிர் காலங்கள்
யாவும் மலையளவு மாயை
என்கின்றனர்....

இதனை எல்லாரும் 
பன்முறை கேட்டாயிற்று...
மேற்கொண்டும் எவரேனும்
சொல்கையில் கேட்பதற்கு
சுகமாகவும் கடைபிடிக்க
சுலபமாகவும் தோன்றும்...
அதற்காக 
நேற்றைக்கு டீச்சர் 
கொடுத்த ஹோம் வொர்க்கை
மறக்க முடியுமா...
செய்யாமல் போனால் நாளைக்கு
அடிவாங்குவதை நினைத்து
பயக்காமல் தான் இருக்க முடியுமா?...



.

Saturday, January 8, 2011

பரஸ்பரம்...

தாயின் மார்புகள்
அறிமுகமே ஆகாத
தத்துக்குழந்தை....
புட்டிப்பாலில்
லயித்தபடி குளித்து
வரும் வளர்ப்புத்தாயின்                      
ஈர மார்பகங்களை
விநோதமாக தரிசிக்கிறது..
வாயினின்று புட்டியை
அகற்றி வாய் பிளந்து
கவனிக்கிறது....

அதன் கவனிப்பை
அந்தத்தாய் ரசித்தாலும்
அது இழந்திருக்கிற
அந்த மெல்லிய சொர்க்கம்
குறித்து அவளுக்குக் கவலைதான்....

கைகளால் தடவிப்பார்க்க
குழந்தை அவளது
மார்பகங்களைக்கேட்கிறது...
--கொடுக்கிறாள்...
காம்புகளை நெரிக்கிறது..,
ஆனந்தமா  வேதனையா
என்று புரியாத கண்ணீர்
கண்களில் கசிகிறது...

மறுபடி புட்டியை  எடுத்து
அதன் வாயில் திணித்தவண்ணம்
ரவிக்கையை மாட்டத்துவங்குகிறாள்...!!

Saturday, January 1, 2011

ஆங்கிலப்புத்தாண்டு வாழ்த்துக்கள் அனைவருக்கும்...
2010  ஆம் வருடம் முடிந்து 2011 ஆம் ஆண்டு பிறந்து விட்டது..
இதை நான் எதற்கு சொல்கிறேன் என்றால் ரொம்பப்பேருக்கு தகவலே தெரிந்திருக்காது என்பதால் தான்..
செக்கிலும் இதர டாக்குமெண்டுகளிலும் கொஞ்ச நாட்கள் பழக்க தோசமாக 2010 என்றே தவறுதலாக குறிப்பிடுவார்கள்..
ஏதோ ஜனவரி முதல் நாள், ப்ளோகில் ஏதாவது கொஞ்சம் எழுதலாம் என்று முடிவு செய்து ... சொதப்புகிறேன்..
எனது பரம ரசிகர்கள் யாவரும்{?} என்னை மன்னிப்பார்கள் என்று கருதுகிறேன்...

நிகர் ...

உந் தன் நிமித்தம்  "ஒருதலைக் காதலன் " தகுதி எமக்கு  சுலபத்தில் வாய்த்தது..  இருதலைப்படுத்தும்  முஸ்த்தீபு எதுவுமற்று  ஏக்...