காலை வணக்கம் ..
மிகவும் நான் விரும்பிக்கேட்பது அன்று முதல் இன்று வரை இளையராஜாவின் பின்னணி இசைகளையும் அவர் புனைந்த பாடல்களையுமே.
மற்றவற்றை கேட்பதில்லை என்றில்லை, ராஜாவினுடையது போல ஆழ்ந்து மனமுருக நானே என்னில் கரைந்து விடுமளவு ஒன்றிப்போய் கேட்கமுடிவதில்லை.
ஓர் காட்சிக்குரிய அனைத்த வீரியங்களையும் தன் இசையில் முன் நிறுத்துகிற வள்ளன்மை வேறெந்த இசை புனைபவர்களுக்கும் கிடையாதென்பது என் அனுமானம். இன்றைக்கும் காகிசட்டையில் "பட்டுக்கன்னம் தொட்டுக்கொள்ள" கேட்டுப்பாருங்கள். இன்றைய புதுப்பாடல்களின் பலவீனங்கள் நமக்கு நன்கு புரிபடும். இந்த ஒரு பாடல் உதாரணத்திற்கு சட்டென்று தோன்றிய பாடல் தான். ராஜாவின் அனைத்து பாடல்களும் இதே பிரமாத தன்மையில் தான் வைரமாக ஜொலிக்கிற ஆற்றல் கொண்டவையே.
நான் ரஹ்மானின் ,ஹாரிஸ் ஜெயராஜின் ,எதிர்ப்பாளன் அல்ல. சமயங்களில் அவர்களது விரல் விட்டு எண்ணக்கூடிய சிலவற்றையும் ரசிப்பதுண்டு.
ராஜாவின் வாரிசுகளான யுவனோ , கார்த்திக்ராஜாவோ கூட இன்னும் இளையராஜாவின் நேர்த்திகளை தொடவில்லை என்பது நிதர்சனம்.
நான் ரசிகன் மாத்திரமே. எதையும் விமர்சிக்கத் துணியும் அளவு புத்திசாலி அல்ல. என் ரசனையின் வெளிப்பாடு விமர்சன சாயலில் அமைந்து விடுவதை தவிர்க்கமுடிவதில்லை.
மறுபடி சந்திப்போம் ...
சுந்தரவடிவேலு..... அன்புடன்.