***********************************************
ரவுடியிஸத்தின் ஸ்தாயி படம் நெடுக..
ஹீரோயிசத்தை காண்பிக்கக் கூட ஒரு ரவுடி போலிருந்து தான் காண்பிக்க வேண்டுமென்கிற இன்றைய சினிமா தன்மையின் அமைப்பு...!
திரைக்கதை பின்னப் பட்ட வீச்சு, கயிற்று மீது நடை போன்ற எடிட்டிங்..
குண்டி அதிர சீட்டுக்கு அடியில் வந்து முழங்குகிற இசை.. யதேச்சையாக ஜன்னல் திறந்து தெருவை கவனிக்கையில் வெளிப்படுகிற பாதாச்சாரிகளின் அனிச்சையான செயற்பாடுகளை விழுங்கிக் கொண்டது போன்ற ஒளிப்பதிவு..
இத்தனை மெருகுகளும் ஒருசேர எவ்வாறு சாஸ்வதம் என்கிற ஆச்சரியங்களும் அதிர்ச்சிகளும்.. !
இவ்வளவு ஆர்ப்பரிப்புக்களுக்கு சொந்தக்காரன் ஒரு அறிமுக டைரக்டர் என்பது இன்னும் வாயை அ க ல த் தி ற க் க செய்கிறது..
இம்மாதிரியான நுணுக்கச் சித்தரிப்புக்களை கவனிக்கையில், இனி மேற்கொண்டு தமிழில் சுலபமான படங்களை எடுக்க ப்ரயத்தனிப்பவர்கள் சற்றே நிச்சயம் வெட்கம் கொண்டாக வேண்டியிருக்கும்..
தேர்ந்த ஒரு நகரத்தின் அவலங்களை, அங்கு வாழ்கிற மனிதர்களின் அவர்களது மனங்களின் அலங்கோலங்களை செவ்வனே காண்பிக்க தவறாதவர்கள், அழகியலையும் அதே விதமாக காண்பிக்கத் தவறவில்லை..
ஸ்வரங்களைக் காட்டிலும், சமயங்களில் அபஸ்வரங்கள் அபரிமிதம் வசீகரிக்க நேர்ந்து விடும்.. அதே விதமாகத் தான், அதியற்புத ஓவியங்களைக் காட்டிலும் ஒரு குழந்தையின் சுவர்க் கிறுக்கல்கள் அதீத அர்த்தம் பொதிந்ததாக மாறிவிடக் கூடும்..
அந்த கதியில் தான்.. இந்த மாநகரம் ... என்னென்னவோ சேர்த்து கோர்க்கப் பட்ட மணம் கமழும் பூச்சரமாக நம்மை மூர்ச்சையாக்குகிறது.. .
No comments:
Post a Comment