Friday, March 17, 2017

அனாமதேய ப் பட்டியல்..

ன்னைப் பார்த்தால் சொல்வதற்கென்று நீண்ட பட்டியல் தயாரித்து வைத்திருக்கிறேன்.. !!

முன்னர், என்றேனும் உன்னை தரிசிப்பதற்காக வாய்ப்பு நிச்சயம் என்றிருந்தவனுக்கு ... பின்னர், தரிசிப்பதற்காக வாய்ப்பு வரக்கூடுமோ வராமலே போய் விடுமோ என்கிற சந்தேகம் துவங்கிற்று.. 

அந்த சந்தேகமும் பொலிவிழந்து .. இனி உம்மை என்றென்றும் சந்திப்பதற்கே இல்லை என்கிற ஊர்ஜிதம் எதற்காகவோ ஒருகட்டத்தில் எனது ஆழ் மனதில் வேரூன்றிற்று.. 

ஆனபோதிலும், எமது பட்டியல் கிழித்துப் போடுவதற்கில்லை.. 
என் கைவசம் என்றென்றும் உள்ளது.. இத்தனை வகையறா குழப்பங்களுக்கு அப்பாலும், உம்மை தரிசிக்கிற வாய்ப்பு கிடைக்கத்தான் போகிறது என்றொரு அசரீரி எமது ஆழ்மன வேரினை துவம்சம் செய்கிற ஆயத்தத்தில் நின்ற வண்ணமாயுள்ளது.. !!

மிக முக்கிய பட்டியல் இது என்பதை நான் சொல்லியாக வேண்டும்.. 
அன்றைய எமது சிறுபிள்ளைத் தனங்களை தகர்த்து .. இன்றைய எந்தன் அற்புத முதிர்ச்சியை விலாவாரியாக விளக்குகின்ற முயற்சி இந்தப் பட்டியல்.. 
அன்றைய எனது சிறுபிள்ளைத் தனங்களுக்கே அகமலர்ந்த உமது பெருந்தன்மை, இன்றைய எனது முதிர்ச்சி கண்டு இன்னும் குதூகலிக்கும் என்பது எமது அனுமானம்.. 
அடக்கவியலாத அன்றைய எமது காதலின் நிமித்தம், உன்னிடம் அதனை ஒருவிதப் பாங்கற்று நான் தெரிவித்தும் கூட முகம் சுழிக்காது புன்னகை ததும்ப நீ இருந்தது---- அன்று என்னில் நிகழ்த்திய சிலிர்ப்பு , இன்றைய பொழுதில் வெட்கமாக வேதனையாக மாறியுள்ளதை எமது பட்டியல் இன்னும் நேர்த்தியாக உமக்கு சொல்லும்.. 

என்னுடைய அனைத்த இறந்தகால நடவடிக்கைகளுக்கும் உன்னிடம் மன்னிப்புக் கோரும் விதமாக செதுக்கப் பட்டுள்ளது எனது பட்டியல்.. 
நீ எந்த சலனங்களை உள்ளடக்கியும் என்னோடு பேசியதோ பழகியதோ இல்லை என்பதை அன்றும் இன்றும் நான் நன்கறிவேன் என்றான போதிலும் ..ஏனோ கேனத்தனமாக.. நீ என்னை மிகவும் மதியாத தன்மையில் நடத்துவதாக நான் புலம்பி உமக்கொரு கடிதம் எழுதி.. ஆம், அதற்கு உம்மிடமிருந்து வருகிற வழக்கமான பதில் கடிதம் வரவில்லை, என்பதோடு அதன் பிறகாக உன்னைப் பார்க்கவும் விழையாமற் போயிற்று..

``

2 comments:

  1. Replies
    1. ஆமாம் ஸார். சில தருணங்களில் எனது சென்ற கால உணர்வுப்புயலினை நான் வெளியிட முனைகையில் எல்லாம் அவை வலுவிழந்தும் - நான் எதிர்நோக்கும் மழையாய் அற்று கானலாகி விடுகிற கண்ணாமூச்சி தொடர்கதையாகிறது Boss

      Delete

நிகர் ...

உந் தன் நிமித்தம்  "ஒருதலைக் காதலன் " தகுதி எமக்கு  சுலபத்தில் வாய்த்தது..  இருதலைப்படுத்தும்  முஸ்த்தீபு எதுவுமற்று  ஏக்...