Sunday, March 19, 2017

மாநகரம் ... [சினிமா விமரிசனம்]


***********************************************
Related image

வுடியிஸத்தின் ஸ்தாயி படம் நெடுக.. 
ஹீரோயிசத்தை காண்பிக்கக் கூட ஒரு ரவுடி போலிருந்து தான் காண்பிக்க வேண்டுமென்கிற இன்றைய சினிமா தன்மையின் அமைப்பு...!
திரைக்கதை பின்னப் பட்ட வீச்சு, கயிற்று மீது நடை போன்ற எடிட்டிங்..
குண்டி அதிர சீட்டுக்கு அடியில் வந்து முழங்குகிற இசை.. யதேச்சையாக ஜன்னல் திறந்து தெருவை கவனிக்கையில் வெளிப்படுகிற பாதாச்சாரிகளின் அனிச்சையான செயற்பாடுகளை விழுங்கிக் கொண்டது போன்ற ஒளிப்பதிவு.. 
இத்தனை மெருகுகளும் ஒருசேர எவ்வாறு சாஸ்வதம் என்கிற ஆச்சரியங்களும் அதிர்ச்சிகளும்.. !

இவ்வளவு ஆர்ப்பரிப்புக்களுக்கு சொந்தக்காரன் ஒரு அறிமுக டைரக்டர் என்பது இன்னும் வாயை   அ க ல த் தி ற க் க  செய்கிறது.. 

இம்மாதிரியான நுணுக்கச் சித்தரிப்புக்களை கவனிக்கையில், இனி மேற்கொண்டு தமிழில் சுலபமான படங்களை எடுக்க ப்ரயத்தனிப்பவர்கள் சற்றே நிச்சயம் வெட்கம் கொண்டாக வேண்டியிருக்கும்.. 

தேர்ந்த ஒரு நகரத்தின் அவலங்களை, அங்கு வாழ்கிற மனிதர்களின் அவர்களது மனங்களின் அலங்கோலங்களை செவ்வனே காண்பிக்க தவறாதவர்கள், அழகியலையும் அதே விதமாக காண்பிக்கத் தவறவில்லை.. 

ஸ்வரங்களைக் காட்டிலும், சமயங்களில் அபஸ்வரங்கள் அபரிமிதம் வசீகரிக்க நேர்ந்து விடும்.. அதே விதமாகத் தான், அதியற்புத ஓவியங்களைக் காட்டிலும் ஒரு குழந்தையின் சுவர்க் கிறுக்கல்கள் அதீத அர்த்தம் பொதிந்ததாக மாறிவிடக் கூடும்.. 

அந்த கதியில் தான்.. இந்த மாநகரம் ... என்னென்னவோ சேர்த்து கோர்க்கப் பட்ட மணம் கமழும் பூச்சரமாக நம்மை மூர்ச்சையாக்குகிறது.. .

Friday, March 17, 2017

அனாமதேய ப் பட்டியல்..

ன்னைப் பார்த்தால் சொல்வதற்கென்று நீண்ட பட்டியல் தயாரித்து வைத்திருக்கிறேன்.. !!

முன்னர், என்றேனும் உன்னை தரிசிப்பதற்காக வாய்ப்பு நிச்சயம் என்றிருந்தவனுக்கு ... பின்னர், தரிசிப்பதற்காக வாய்ப்பு வரக்கூடுமோ வராமலே போய் விடுமோ என்கிற சந்தேகம் துவங்கிற்று.. 

அந்த சந்தேகமும் பொலிவிழந்து .. இனி உம்மை என்றென்றும் சந்திப்பதற்கே இல்லை என்கிற ஊர்ஜிதம் எதற்காகவோ ஒருகட்டத்தில் எனது ஆழ் மனதில் வேரூன்றிற்று.. 

ஆனபோதிலும், எமது பட்டியல் கிழித்துப் போடுவதற்கில்லை.. 
என் கைவசம் என்றென்றும் உள்ளது.. இத்தனை வகையறா குழப்பங்களுக்கு அப்பாலும், உம்மை தரிசிக்கிற வாய்ப்பு கிடைக்கத்தான் போகிறது என்றொரு அசரீரி எமது ஆழ்மன வேரினை துவம்சம் செய்கிற ஆயத்தத்தில் நின்ற வண்ணமாயுள்ளது.. !!

மிக முக்கிய பட்டியல் இது என்பதை நான் சொல்லியாக வேண்டும்.. 
அன்றைய எமது சிறுபிள்ளைத் தனங்களை தகர்த்து .. இன்றைய எந்தன் அற்புத முதிர்ச்சியை விலாவாரியாக விளக்குகின்ற முயற்சி இந்தப் பட்டியல்.. 
அன்றைய எனது சிறுபிள்ளைத் தனங்களுக்கே அகமலர்ந்த உமது பெருந்தன்மை, இன்றைய எனது முதிர்ச்சி கண்டு இன்னும் குதூகலிக்கும் என்பது எமது அனுமானம்.. 
அடக்கவியலாத அன்றைய எமது காதலின் நிமித்தம், உன்னிடம் அதனை ஒருவிதப் பாங்கற்று நான் தெரிவித்தும் கூட முகம் சுழிக்காது புன்னகை ததும்ப நீ இருந்தது---- அன்று என்னில் நிகழ்த்திய சிலிர்ப்பு , இன்றைய பொழுதில் வெட்கமாக வேதனையாக மாறியுள்ளதை எமது பட்டியல் இன்னும் நேர்த்தியாக உமக்கு சொல்லும்.. 

என்னுடைய அனைத்த இறந்தகால நடவடிக்கைகளுக்கும் உன்னிடம் மன்னிப்புக் கோரும் விதமாக செதுக்கப் பட்டுள்ளது எனது பட்டியல்.. 
நீ எந்த சலனங்களை உள்ளடக்கியும் என்னோடு பேசியதோ பழகியதோ இல்லை என்பதை அன்றும் இன்றும் நான் நன்கறிவேன் என்றான போதிலும் ..ஏனோ கேனத்தனமாக.. நீ என்னை மிகவும் மதியாத தன்மையில் நடத்துவதாக நான் புலம்பி உமக்கொரு கடிதம் எழுதி.. ஆம், அதற்கு உம்மிடமிருந்து வருகிற வழக்கமான பதில் கடிதம் வரவில்லை, என்பதோடு அதன் பிறகாக உன்னைப் பார்க்கவும் விழையாமற் போயிற்று..

``

Saturday, March 4, 2017

குற்றம்  23......
================
[திரைப் பட சிறு விமரிசனம்]
Image result for kutram 23 imagesImage result for kuttram 23 arivazhagan imagesImage result for kuttram 23 arivazhagan images

ராஜேஷ்குமாரின் நாவலைத் தழுவித் புனையப்பெற்ற இத்திரைப் படம், அவரது நாவலுக்கு மேலும் மெருகூட்டியுள்ளது..
அறிவழகனின் இந்தப் புனைதல், தமிழ் சினிமா கலாச்சாரத்தின் மிக முக்கிய மைல்கல் எனில், அது மிகையன்று..
செதுக்கிவைத்தாற்போன்ற திரைக்கதையும், அதற்கேற்றாற்போன்ற பாத்திரங்களின் பங்களிப்பும், அவர்களின் யதார்த்த உன்னத நடிப்புக்களும் படம் நெடுக சோபை மிளிர்ந்து பார்ப்பவர்களின் இமைகளை பாம்புகள் போன்றே மூடாதிருக்க செய்திருக்கின்றன.. !

எஸ்.ஐ யாக அசத்தியுள்ள அருண்விஜய் ... இத்தனை கால மெனக்கெடல்களுக்குப் பிற்பாடான ஒரு வெற்றியினை சுவைக்க ரசிகர்கள் எல்லாம் ஒத்துழைக்குமாறு வேண்டிவிரும்பிக் கேட்டுக் கொள்கிறேன் ..

அலட்டலில்லாத பின்னணி இசை.. பிரபலமாவதற்கு வாய்ப்பில்லாத ரெண்டொரு பாடல்கள்.. தேவையற்ற இடங்களில் பொருத்தமான மவுனம் என்கிற விதமாக யதார்த்த இசை .. யாரோ ஒரு அறிமுக இசையமைப்பாளர் போலும்.. !

குழந்தையற்றவர்கள் படுகிற மன உளைச்சல், உடல் அயர்ச்சி, சமூகம் அவர்களை பிரித்துவைத்துக் காண்பிக்கிற பாரபட்சம், ...
உதவுகிறேன் என்று வருகிற இதன் வகையறா ஆசுபத்திரிகள் போடுகிற பொய்வேஷங்கள், .... அதன் பின்புலமாக செயல்பட்டு ஆதாயம் தேடுகிற கொள்ளைக்கும்பல் ... என்று தமிழசினிமா இதுவரை காணாத புது தளங்களில் பயணிக்கிறது படம்..

ஒன்றுமில்லாத குப்பைப் படங்களை தலையில் தூக்கிவைத்து ஆடுகிறோம்.. அவைகளுக்கு டீசர் ட்ரைலர் என்று சமூக தளங்கள் அடிக்கிற வெட்டிப் பறைகள் போதுமென்று நினைக்கிறேன்.. இம்மாதிரி அந்தஸ்துள்ள படங்களை மாத்திரம் ப்ரத்யேகமாகக் கொண்டாடப் படவேண்டுமென்று உங்களையெல்லாம் மிகத் தாழ்மையோடு  வேண்டிவிரும்பிக் கேட்டுக்கொள்கிறேன்.. நன்றி..  !!

நிகர் ...

உந் தன் நிமித்தம்  "ஒருதலைக் காதலன் " தகுதி எமக்கு  சுலபத்தில் வாய்த்தது..  இருதலைப்படுத்தும்  முஸ்த்தீபு எதுவுமற்று  ஏக்...