================================
புணர்தல் என்பது
உமக்கான பிரம்ம வாய்ப்பு..
உன் உயிரணுவும்
பிரம்மனும் ஒருங்கிழைகிற
மகோன்னத தருணம்.. ?
தன்வயமிழந்து
பரஸ்பரம் சிலிர்த்துச்
சிதறுகிற அந்தப்
"பளீர்" க்ஷணம்
பரவச உற்சவம்.. !
பிற்பாடாக.. ... ..
ஆளாளுக்குப் பிய்ந்து போய்
ஆசுவாசப் பட்டுக் கிடக்கையில்
நித்திரையின் இனிய
கோரப் பிடியில் இருவரும்.. !!
காமத்தின் மாய்மாலத்தில்
கவிழ்ந்து கிடப்பதென்பது
திரவ போதை வஸ்த்துக்களை
இரண்டாம் பட்சமாக்கும்
சம்பவமாகும்.. !
ஆபாச சாயம் பூசுகிற
பத்தாம்பசலி வர்க்கங்களும்...
ஆவேசக் குரலுயர்த்துகிற
லேகிய விற்பன்னர்களும்
காமத்தை விற்கத் தெரிந்த
வல்லுநர்கள்..