முன்னர் அமோகமாகக் குலுக்கப் பட்டஎமது கரங்கள் ..அதே நம்பிக்கையில்மறுபடி கொடுக்கப்பட்ட போது ,சற்றும் எதிர்பாராமல்"ஐயோ" என்று நானே பதறுமளவு முறுக்கப்பட்டன..ஸ்நேகமான குலுக்கல்கள் எமதுகைககளை விட்டல்ல.. என்னை விட்டே பெயர்ந்து போயினவோ?எல்லாருக்குமான எதார்த்தம் இப்படித்தான் ... உச்சி செல்வதற்கான சந்தர்ப்பங்களில் சென்று விட்டு.. குறிப்பிட்ட தருணங்கள் கழிந்த பிற்பாடு நாசுக்காக இறங்கி வந்துவிட வேண்டும்.. உச்சி தான் பிடித்தது என்று அங்கேயே வீற்றிருந்தால் புலி உறுமும் .. யானை கர்ஜிக்கும்.. எல்லாரும் உன்னை உச்சியில் ஏற்றி விட்டபோது பாதுகாப்பும் பலமாக இருந்தன..
இன்று நீ அடம்பிடித்து உட்கார்ந்து கொண்டிருந்தால் உமக்கான பாதுகாப்பு கழற்றி விடப் பட்டிருக்கும்.. எறும்பு கடித்தால் கூட அரண்டு போய் நீ அடிவாரம் வந்துவிழ வேண்டும்.. !அடிவாரம் வந்தால் மாத்திரம் பாதுகாப்பு என்ன நமக்கு இனி என்கிற அறிவுப் பூர்வமான கேள்விகள் சந்தேகங்கள் வந்துவிடவேண்டும்..
அதுவும் தெரியாமல் புரியாமல் ஆடினால் கோவணம் உதிர்வது கூடப் புரியாத அம்மணத்தில் அலங்கோலப் பட்டாகவேண்டும்.. !!
சரி... நடக்கட்டும்...
ReplyDeleteஇனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்...