காந்தியை சுட்டுக் கொன்ற கோட்சேவை மெச்சுகிற முயற்சிகளும் சிலை வைக்கிற முஸ்தீபுகளும் சமீபத்திய செய்திகள்..
இதனை அங்கீகரிக்கிற விதமாக சிலரது பலரது மனநிலைகள் ..
ஃபேஸ் புக்கில் இந்த சங்கதி குறித்து ஒரு நீண்ட கடிதம் போன்று வெளியிட்டு இருந்தனர்.. கோட்சேவின் நியாயங்கள் மற்றும் வாக்குமூலங்கள் அவை.. அதற்கு "like " கொடுத்திருந்த அநேகம் பேர்கள்..
அதற்கு நானொரு பின்னூட்டம் போட்டிருந்தேன்.. அதனை இங்கே வெளியிட விரும்புகிறேன்.. !!

நான் காந்தியவாதியாகவோ கோட்சேவாதியாகவோ இங்கே வாதங்களை முன்வைக்க விரும்பவில்லை... எனது தனிப் பட்ட கருத்துக்களையும் சில அனுமானங்களை மாத்திரமே சொல்லிப் பார்க்க முயல்கிறேன்....
பொதுவாக நெரிசலில் பிக்பாக்கெட் அடித்து பொதுமக்களிடம் சிக்கிக் கொள்கிற சில்லறைத் திருடன் கூட, தமது செயல்களுக்கான தர்மங்களையும் நியாயங்களையும் நிலைநிறுத்தும் விதமாக வாதிப்பதில் கெட்டிக் காரனாகத் தான் இருப்பான்.. தமது செய்கை, தவறுகள் அல்ல என்கிற தீர்மானம் அவன் வசம் ஏராளம்..!
சுடப்பட்ட காந்தி மேற்கொண்டு எதுவும் பேசுவதற்கில்லை என்பதற்காக, சுட்ட மனிதரின் வாதங்களை உடனே உள்வாங்கி ஏற்றுக் கொள்கிற அப்பாவிகளாக நாம் இருந்து விடக்கூடாது..
காந்தி உயிரோடு இருந்த தருணத்திலேயே கோட்சே தமது முரண்பட்ட கருத்துக்களை, எழுத்து வடிவிலோ வார்த்தை வடிவிலோ காந்தியிடம் தெரிவித்திருக்க வேண்டும்.. அதற்கான காந்தியின் கருத்துக்களையும் பதிவு செய்யப் பட்டிருக்கவேண்டும்..
ஆனால் எதுவுமற்று இவரது ரகசிய முடிவில் அவரது உயிர் பிரிந்த பிற்பாடு, அதிலே உள்ள நியாயத்தை மக்களிடம் பரப்ப முயன்று தியாகி ஆக முயல்வது எவ்வித நியாயம்?..
காந்தியைக் கொல்லாமல் கோட்சே தமது வாதங்களை முன்வைத்திருந்து அதிலே நியாயமும் இருந்திருக்கும் பட்சத்தில், காந்தியை புறக்கணிக்க மக்களுக்குத் தெரியாதா?. கோட்சேவை கொண்டாட மக்களுக்குத் தெரியாதா?..