முதல் முறையாக கந்தர் சஷ்டிக்கு சூரசம்ஹாரம் பார்க்க திருச்செந்தூர் சென்று வந்தேன்..
கிட்டத்திட்ட நாற்பதாண்டு காலங்களுக்கும் மேலாக எப்படி இந்த பிரம்மாண்டத்தை கேள்விப் பட்டுக் கொண்டு மட்டும் இருந்தேன் என்கிற கவலையான வினா விடையற்று ததும்பிற்று என்னில்..
நரகக் கூட்டம் அது.. எங்கெங்கிலும் பம்மி பம்மியே சென்றாக வேண்டிய கடின சூழல்.. தனித்து சென்றேன் என்பதால் பிற பெண்களுள் சுலபத்தில் இழைய நேர்ந்தது.. அனைவருக்குமே அப்படியான வாய்ப்புகள் அங்கே வேண்டாமெனிலும் கொட்டிக் கொடுக்கிறது இந்த நாள்..
எதிரினக் கவர்ச்சிகளும் பக்தி எண்ணங்களும் பரவசக் குழப்பத்தில் யாதொருவரையும் ஆழ்த்தி விடுகிற வல்லமையை பிரவகிக்க செய்கிற இந்த சூழல், சற்றே குற்ற உணர்வுகளையும் எட்டிப் பார்க்க செய்கிற ஒரு தர்மசங்கடத்தினை நம்முள் திணிக்கத் தான் செய்கிறது..
சட்டை பனியன் கழட்டியாக வேண்டும்.. வியர்த்து வழிகிற வெற்றுடம்போடு ஆளாளுக்கு உரசுகிற அந்த அவஸ்தை.. அதனூடே பெண்டிரும் வந்து........ எல்லா சோம்பேறிகளின் கலோரிகளும் நிச்சயம் நேற்று அதிகம் எரிந்திருக்கக் கூடும் என்பது எமது . அனுமானம்.ஆம், வியர்த்து ஒழுகியும், மன அரிப்பின் வக்கிரத்திலும் பல கலோரிகளும் பொசுங்கி சாம்பலாகி இருக்கக் கூடும்.. !!
முருகனைத் தவிர்த்து எல்லா கபட நாடகங்களும் அங்கே சுலப அரங்கேற்றமாக வியாபித்திருக்கிற கொடுமை சற்றே உற்று நோக்கின், புலனாகும்.. 250 ரூ. டிக்கட் வாங்கிக் கொண்டு என்னோடு வந்து பொது தரிசனத்தில் சுவாமி கும்பிட்ட நபர்.. அப்படி பல நபர்கள்..
இத்தனைக்கும் எனக்கு முன்னரே டிக்கட் எடுத்துக் காத்துக் கொண்டிருந்து விட்டு வந்தவர்கள். நான் அந்தக் கூட்டத்தில் தி.நெ.வேலியில் வாங்கி வைத்திருந்த ஹல்வாவை திணித்து விட்டு உட்புகுந்த பரம ரகசியம் எமக்கே ஆச்சர்யம்.. புகுந்தேனா உள்ளே கொண்டு வரப் பட்டேனா என்பதெல்லாம் அந்தக் கடவுளுக்கே வெளிச்சம்.. 250ரூ.டிக்கட்டை கையில் வைத்துக் கொண்டு உள்ளே வர முடியாமல் திணறிக் கொண்டிருந்த பரம பக்தர்களின் கதி நகைக்க உகந்ததாக இருந்தது..
திருப்பூரில் எமக்கு பரிச்சயமான சில நபர்களை தி.செந்தூரில் தரிசிக்க வாய்த்தது .. அடிக்கடி திருப்பூர் ஈஸ்வரன் பெருமாள் கோவில்களில் நான் பார்க்க நேர்ந்த ஒரு நபரை அடையாளம் கண்டு .. "நீங்க திருப்பூர் தானே?"
"யெஸ் .. நீங்க?"
"நானும் திருப்பூர்.. உங்களை நான் நம்ம ஊர் கோவில்களில் அடிக்கடி பார்ப்பேன் .. "
"ஓ .. அப்டியா.. "
அவர் தி.செந்தூருக்கு குடும்பத்தோடு வந்து ஒரு வாரமாக லாட்ஜில் தங்கி இருப்பதையும் அன்றாடம் வந்து தரிசனம் செய்து விட்டு செல்வதையும் பெருமையாக சொல்லி.. "நீங்க சாமி பார்த்துட்டீங்களா?" என்று கேட்டார்.
நான் "இல்லைங்க" என்ற எமது சோக வரலாற்றை சொல்லவே, மனுஷர் டென்ஷன் ஆகி .. அவருக்கு அறிமுகமான ஒரு அய்யரை எமக்கு அறிமுகப் படுத்தி "இவரு எங்க ஊரு.. பார்த்து உள்ளே தரிசனம் செய்ய உதவுங்கள்" என்று சொல்லி நாசுக்காக நகர்ந்து கொண்டார்..
"முருகன் நம்மை கை விடலை" என்கிற எமது அனுமானம் பொடி தவிடாக 2 நிமிடம் தான் பிடித்தது.. "உடனே உள்ளே போக எல்லார் கிட்டவும் 1500 ருப்பீஸ் வாங்கறேன்.. எனக்கு தெரிஞ்சவா உங்க ஊர்க்காரர்.. அவர் இன்ட்ரட்யூஸ் பண்ணியதால ஜஸ்ட் ஒரு தௌஸண்ட் கொடுத்தேல்னா போறும் "
'இன்னாங்கடா நடக்குது இங்க?.. இப்டியுமாடா குடுமியப் போட்டு பட்டய விட்டுக்கிட்டு ருத்ராக்ஷய மாட்டிக்கிட்டு ஃப்ராடு பண்ணுவீங்க?' என்று தமிழ் ஹீரோஸ் விக்ரம் விஷால் ரேஞ்சுக்கு கதற வேண்டும் போன்று வெறி என்னில் பூவாகி, பிஞ்சாகி, கணிந்தாலும் யதார்த்தத்தில் யாவற்றையும் மூடிக் கொண்டு மெளனமாக அந்தப் பக்கம் நகர்ந்து விட மட்டுமே நேர்ந்தது..
நாமெல்லாம் தான் கல்லில் கடவுளைக் காண இங்கே குழுமி வந்துள்ளோம். இங்கே வீற்றிருக்கிற கோவில் பூசாரிகளும் அர்ச்சகர்களும் இன்னபிற கோவில் சார்ந்த நபர்களும் பேசுகிற கடவுளையே கண்டிருந்தாலும் வாயில் மண்ணை கல்லை வைத்து அடக்கி விட்ட கயவர்கள் என்று தான் தோன்றிற்று எனக்கு..
சரி நமக்கெங்கே சாமி தரிசனம் தரப் போகிறார்?.. அடுத்த ஒரு அமைதி தருவாயில் வந்து குடும்பத்தோடு தரிசிப்போம் .. இப்போதைக்கு கடலில் கொஞ்சம் நேரம் அளவளாவி விட்டு நகர்ந்து விடுவதே உத்தமம் என்றொரு முடிவு எடுத்தவனுக்கு செந்தூர் முருகனே மனம் இறங்கி இருக்க வேண்டும்..
நான் வெளியே செல்ல வேண்டும் என்று கெஞ்சியும் என்னை வெளியில் . விடவில்லை. 'இந்தக் கூட்டத்துல நீங்க வெளிய போக முடியாது.. அப்டி கோவிலுக்கு உள்ளே போயி தான் வரமுடியும் ' என்று சிறை வைத்தனர்..
பிரணவ மந்திரத்துக்கு அர்த்தம் புரியாத பிரம்மனை முருகன் சிறை வைத்தது போல, தேவர்களை இம்சித்த காரணத்துக்காக சூரனை சம்ஹாரம் செய்தது போன்று ... நானும் ஏதோ தவறுகள் புரிந்து முருகனிடம் வசமாக மாட்டிக் கொண்டது போன்ற அனர்த்த பிரம்மைகள் என்னில் புடைசூழ்ந்து குடைந்து எடுத்தன....
ஆட்டு மந்தையைத் திறந்து விட்டது போன்று கதவைத் திறக்கவே திமுதிமு வென்று கூட்டம் முட்டி மோதவே நானும் அவர்களுள் ஐக்கியமாகி உட்புகுந்து முருகன் முகம் கண்டு அகமலர்ந்தேன்..
கோவிலின் உட்பிரகாரத்தினுள் நிகழ்ந்த களேபரங்கள் , சேரிக்குள் நடக்கிற வன்முறைக்கு கொஞ்சமும் சளைத்ததில்லை.. குத்தும் வெட்டும் ரத்தக் களரிகளும் மிக மிக சாசுவதம் போன்று அங்கே பொதுமக்களும் போலீசுகளும் மோதிக் கொண்டதைப் பார்க்க நேர்ந்து ஆடிப் போனேன்..
ஒரு மிகப் பெரிய கலவரம் நேர்ந்து, சூரபத்மனை தலையை எடுத்து அசுரர்களை கொன்று குவித்த மெல்லிய அழகு முருகனின் இந்த வரலாறு அன்று நிஜத்தில் நிகழ நேர்கையில் இதே ஆர்ப்பரிப்போடு கடல் இருந்திருக்கலாம். ஆனால், இப்படியான மனிதக் கூட்டங்களும் ஆர்ப்பரிப்புகளும் இருந்திருக்குமா என்பது கேள்வி..
ஆனால் இதே கற்பனையோடு, இதே ஒரே கதையோடு ஒவ்வொரு வருடமும் நிழலாக நிகழ்கிற இந்தக் கூத்துக்கு பரவி இருக்கிற மக்களுக்கு எத்தனை முருகன் வந்து எத்தனை சூரர் தலைகளை காவு வாங்கினாலும் போதாது என்றே தோன்றுகிறது.. " ஹ்ம்ம்.. கமான் முருகா.. இன்னும் இன்னும்.. ஒன்ஸ் மோர்" என்று காரவத்தலை வேர்கடலையை பட்டாணி சுண்டலை வாயில் போட்டு அரைத்துக் கொண்டே கூவிக் கொண்டே இருப்பார்கள்..