Saturday, August 17, 2013

தலை [வலி] வா...!!

துப்பாக்கி இப்டிதான் பிரச்னை ஆகி அப்புறம் ரிலீஸ் ஆகி .. ஹிட் ஆச்சுங்கறதால .. இப்ப விஜய் அண்ணே தலைவாவையும் அதே விதமா செண்டிமெண்ட் பண்ணி விடப் போறாரோன்னு ஒரு கெஸ்ஸிங் ... இல்ல நைனா அது தப்பு.. ரெண்டு விஜய் பசங்களும் பாடா படறாங்கன்னு பீல்டுல எல்லாருமா ஒப்பாரி வக்கிறாங்க..

தியேட்டர் காரங்களும் ரசிகப் பசங்களும் அத்தப் பெரிய பாணர்களை ஏத்தி எறக்கி வச்சே ஒரு வழி ஆயிட்டாங்கோன்னு மும்பைல அமித்தாபச்சன் கூட ரொம்ப பீல் பண்ணி டுவிட்டர்ல ட்வீட் பண்ணி இருந்தாருன்னு சொன்னா... அது பொய்யி நைனா.. !

இப்ப இன்னா மெயின் பிரச்னைன்னா .., சும்மா இவுக பாட்டுக்கு தமிழ்நாட்டுல மாத்திரம் பான் பண்ணிட்டு மத்த ஸ்டேட்கள் -ல மத்த கண்ட்ரீஸ் -ல  எல்லாம் வெளியாண்ட வுட்டுட்டாங்க.. இப்ப சர்வ சாதாரணமா சூப்பர் சூப்பர் பிரிண்ட்ல dvd உள்ளாற பூந்துடும்.. ரசிகர்களுக்கே பொறுக்காம சும்மா பாரு பாருன்னு பார்த்துத் தள்ளிடுவாங்க.. அப்றம் தியேட்டர்க்கு ஒரு பார்மல் விசிட் அடிப்பாங்கன்னு வையுங்க.. ஆனா, மத்த பசங்க.. 'இந்தக் காவியத்த dvd ல ஒருவாட்டி பார்த்தா போதாதா ?.. ன்னு முடிவு பண்ணி வைப்பாங்க ஒரு அதிர்வேட்டு..

ஆகமொத்தத்துல தலைவா படத்தை தயாரிச்ச ப்ரொடியூசர் ஒரு வழி ஆயிடுவாரோ?.. அல்லது இந்த லாஸ் எல்லாம் பாக்கெட் மணி மாதிரியோ... எது எப்டியோ அதிமுக ஜெயிக்க ஒரு அணில் மாதிரி இருந்து செயல்பட்ட இளைய தளபதிக்கு  ஜெ . கிட்ட இருந்து இம்மா சைஸ் ரெஸ்பான்ஸ் கூடாதுப்பா.. Vijay 1

Thursday, August 15, 2013

சுதந்திர இந்தியாவில்...

சிறைப்பட்ட தன்மை அனுபவத்திற்கு வருகையில தான் சுதந்திரத்தின் வசீகரம் எவ்வளவு பெரியதென்பது புரியக் கூடும்.. 

ஆனால் நாமெல்லாம் போராட்டங்களின் சுவடுகளே புரியாமல் போராடியவர்கள் பெற்றுத் தந்த அந்த மகத்தான சுதந்திரத்தைக் கொண்டாடி வருகிறோம்... 

சுதந்திரம் என்கிற ஓர் பிரம்மாண்ட விஷயத்தை எவ்விதப் பிரயத் தனங்களும் அற்று நமது அனுபவத்தில் கொண்டுள்ளோம்... மிகப் பெரிய துயர்களை அனுபவித்து அதனின்று விடுதலை பெறவேண்டும் என்கிற போராட்டக் களங்களில் அன்று நாமில்லை... 

காந்தியும் இன்னபிற மாபெரும் தலைவர்களும் ஒருங்கிழைந்து.. கிடைத்தற்கரிய அந்த எட்டாக்கணியை இந்த தேசத்து மக்களுக்காகப் பறித்துண்ணக் கொடுத்தமையால் இன்று நாம் அதனை சுகமாக சுவைத்துக் குதூகலிக்கிறோம்.. அந்த சுதந்திரம் பிறந்த நாள் வருகையில் கும்மாளமிடுகிறோம் .. 

சுதந்திரம் என்பது எப்போதுமே பிறந்த நாளாகவே கொண்டாடப் படவேண்டும் என்பது நமது அவா... 


ஆனால் துரதிர்ஷ்டவசமாக இந்தியாவின் பல பிராந்தியங்களில் சுதந்திர தினமென்பது நினைவு நாளாகக் கொண்டாடப் படுவதாகவே தோன்றுகிறது... அன்று ஆங்கிலேயர்கள் அரங்கேற்றிய அதே கொடுங்கோலாட்சியை, அதனைக் காட்டிலும் அபரிமித அதிகாரங்களோடு, பற்பல சிறார்களும் ஏழை எளிய மக்களும் பல இந்திய கிராமங்களில் நடத்தப் படுகின்றனர்.. 

அன்று காந்தி போராடிப் பெற ஒரு சுதந்திரம் என்கிற விஷயம் பிரதானமாக அமைந்திருந்தது.. ஆனால் இந்த சுதந்திர இந்தியாவில் இன்று பற்பலரும் போராடுகிற திராணி கூட அற்று வாய்மூடி மௌனிகளாக வலிகளோடு உழைத்து வாழ்ந்து வருகின்றனர்... இவர்கள் போராடினால் கிடைக்கப் போவது  சுதந்திரம்  அல்ல.., வயிற்றுப் பட்டினி மட்டுமே...!!



Monday, August 12, 2013

பச்சையாய் ஒரு செக்ஸ் ஜோக் ....

ஓர் மனைவி தனது கணவனிடத்து யதார்த்தமாகச் சொன்னாள் ..:

"நேற்றொரு செய்தி படித்தேன்... பிரபல ஆஸ்பத்திரி ஒன்றில் ஓர் பெண் நோயாளி ஒருத்தி இன்னும் சற்று நேரத்தில் ஆப்பரேஷன் தியேட்டருக்குள் செல்லவிருக்கிறாள்... அவளை ஆடை மாற்றச் சொல்லி ஓர் ஆண் செவிலியர் வந்து சொல்கிறார்.. அதன் நிமித்தம், அவள் பாத்ரூம் சென்று ஆடை மாற்றுவதை ஒளிந்திருந்து பார்க்கிறார்.. மறுபடி படுக்கச் சென்ற அந்த நோயாளிப் பெண்ணை, சிறிது நேரம் கழித்து மறுபடி வேறு ஆடை மாற்ற வேண்டுமென்று சொல்ல, அந்தப் பெண் அவ்விதமே செய்ய பாத்ரூம் செல்ல, பின்னிருந்து வந்த அந்த ஆண் நர்ஸ் அந்த நோய்வாய்ப் பட்ட பெண்ணை கட்டி அணைக்க முயல, அவள் கதறி கூக்குரலிட்டு எல்லாரையும் வரவைத்து அந்தப் பனாதிப் பயலின் மானத்தை வாங்கி, கடைசியில் கைது செய்து வேனில் ஏற்றினார்களாம்".. 

அதற்கு அவளது  கணவன் சொன்னான்:

"நல்ல வேலை.. அந்த இடத்தில் நீ இருந்திருந்தால் கதறியும் இருக்கமாட்டாய்.., அவன் அரெஸ்ட்டும் ஆகி இருக்கமாட்டான்.. "

Saturday, August 10, 2013

உலகமகா அற்பவிஷயங்கள்..

ஜினி கமல் தக்காளி வெங்காயம் எல்லாமே .ஏற்ற இறக்கங்கள் கண்டு..
ரஜினியும் கமலும் ஒரு நாள் காணாமலே போக ...  தக்காளியும் வெங்காயமும்  மக்களை இதே திணறடிப்பில் மூழ்கச் செய்யும்..!

பழனி முருகனும் திருப்பதி வேங்கடாசலபதியும் அவர்களின் பஞ்சாமிருத  லட்டுகளும் என்றென்றும் மக்கள் மனங்களில்.. .நாவுகளில்.!!

 என்றென்றைக்கும் சாஸ்வதமான சில  விஷயங்கள் ...
 தற்காலத்தில் பிரபலமாயும் செல்வாக்காயும் வாழ்கிற சிலரோடும்  சில அற்ப விஷயங்களோடும்  ஒப்பீடு செய்யப் பட்டு..
--- அவ்வித சாஸ்வத தன்மைகளோடு விளங்கி வருபவைகளே கூட இரண்டாம் பட்சமாகி விடுகிற விபரீதங்களும், ஹாஸியங்களும் எல்லா காலகட்டங்களிலும் சுலபத்தில் சாத்யமாகி விடுவது  .....  அந்த தன்மை ஓர் வார்த்தைக்கு அப்பாற்பட்டதென்றே சொல்வேன்..!!

ஆனால் மற்றொன்றையும்  இங்கே சொல்லியாக வேண்டும்..
பழநியானாலும் திருப்பதியானாலும் ஓர் அற்ப காலம் வாழ்கிற மனிதன் பார்த்து நிர்ணயித்த ஸ்தலங்கள் தாமே?.. வழிவழியாக அங்கே அலைமோதுகிற கூட்டங்கள் பிரதானமாகி அந்த ஓர் தன்மையினை  நிர்மாணித்த ஓர் மனிதன் மறுக்கவும் மறக்கவும் .படுகிறான்..

ஆக, ஓர் மனிதனைக் காட்டிலும் அவன் நிர்மாணித்த விஷயங்களே  அழியா புகழோடு  எல்லா காலங்களிலும் ஊடாடிக் கொண்டுள்ளதெனில் அது .மிகையாகா..!

அவனது சாதனைகள் வரலாறுகளில் பட்டியலிடப் படுகின்றன..
அவனது  பிறந்த மற்றும் மறைந்த நாட்கள் அடையாளப் படுத்தப் படுகின்றன.. நினைவுகூரப் படுகின்றன... கொண்டாடப் படுகின்றன..


இதொன்றும் பெரியதொரு கண்டுபிடிப்பன்று.. ஆயினும் இந்த மூலாதாரம் அனைவராலும்  சுலபமாக  மறக்கப் பெற்ற விஷயங்களே..!! இதே விதி தான் ஷாஜகான் நிர்மாணித்த தாஜ்மகாலுக்கும் பொருந்தும்... மற்றவற்றுக்கும் வைஸ் வெர்ஸா .... !

ஏதேனும் அறிவுப் பூர்வமாக சொல்லிப் பார்க்கிற முஸ்தீபில் ஏதோ கிறுக்கியதாக  உளறியதாக மனசுக்குத் தோன்றுகிறதெனிலும்.. இனி எழுதியதை எதற்காக எரேஸ் செய்யவேண்டும் என்று படுகிறது.. ஆகவே, போட்டுத்தாக்கு என்கிற ரேஞ்சில் இடுகையை இட்டாயிற்று.. இருந்து விட்டுப்  போகட்டுமே..இப்படியும் ஒரு ஸ்கிரிப்லிங்.. ஹிஹி.. 




நிகர் ...

உந் தன் நிமித்தம்  "ஒருதலைக் காதலன் " தகுதி எமக்கு  சுலபத்தில் வாய்த்தது..  இருதலைப்படுத்தும்  முஸ்த்தீபு எதுவுமற்று  ஏக்...