இயக்குனர் மணிரத்தினம் குறித்து எனக்குப் புரிந்த தெரிந்த சில விஷயங்களைப் பரிமாற விரும்புகிறேன்..
சினிமா என்கிற ஓர் தன்மையை ஓர் மெருகூட்டலாக, ரசனைப் பிரவாகமாகத் துவக்கி வைத்த பெருமை ம.ரத்னத்தை நிச்சயம் சாரும்... ஒரே இளையராஜாவைப் பார்த்து பல இசைக் கலைஞர்கள் இன்று வளர்ந்து நிற்பது போல, அந்த வளர்ச்சியில் இ.ராஜாவே சற்று ஓரங்கட்டப் பட்டுவிட்டதாக உணரத் தோன்றுகிற விதமாக காலமும் மனிதர்களும் அவரைப் புறந்தள்ளிய ஓர் தன்மையை .. நிச்சயம் இசையை சினிமாவில் பிரத்யேகமாக ரசிக்கிற எவருமே அடையாளம் கண்டுணர சாத்தியப் படுமென்று அனுமானிக்கிறேன்..
அந்த ராஜாவைப் புறந்தள்ளியவர்கள் பட்டியலில் நிச்சயம் ம.ரத்னமும் அடக்கம்.. அவருடைய காட்சி அமைப்புகளுக்காவது a r ரஹ்மானின் இசை சற்று பொருந்திப் போயிற்று.. ஆனால், பாரதிராஜாவின் செல்லுலாய்டு, ராஜா இசையை இழந்த நாள் தொட்டு எவ்வித உன்னத தன்மைகளையும் பிரதிபலிக்கவில்லை என்பதை எவரும் மறுப்பதற்கில்லை..!
மெல்லிய கதை அமைப்புகளிநூடே ரத்தக் களரி நிரம்பிய வன்முறைகளை சுலபமாக தனது திரைக் கதைகளில் திணிப்பதில் வல்லவர் ம.ரத்னம்.. முள் பலாவை துளைத்தால் தான் சுவை நிரம்பிய சுளைகள் தென்படும் என்பது போன்ற ஜிம்மிக்ஸ் வேலைகளை செவ்வனே அரங்கேற்றுகிற சாதுர்யம் ரத்னத்தின் முத்திரை..
என்றோ புனையப் பெற்ற ராமாயணம் --மேற்கொண்டும் திரிக்கப் பட்டு ராவணன்...
தமிழகத்தை ஆள்கிற அரசியல்வாதிகளை மேற்கோள் காண்பித்து இருவர்..
இதையெல்லாம் தமிழக மக்கள் வாயைத் திறந்து கொண்டு ரசிப்பார்கள் என்று நம்பி ஏமாந்த மணி, உப்புசப்பில்லாத கடல் படத்தை எடுத்ததும்,
இந்தத் தோல்விகளை சரிக்கட்டும் விதமாக இனி இன்னொரு படத்தை எடுத்து தமிழக ரசிகர்களை குளிர்விக்கப் போவதாகவும் சில சினிக் கிசுகிசுக்கள்..
ஓர் தெளிவான கலைஞன், குறிப்பிட்ட காலத்தில் தனது சிருஷ்டிகளை இயல்பாகவே நிறுத்திக் கொள்வது ஓர் பெரிய அறிவு சார்ந்த விஷயம்.. உடலில் மனதில் தெம்பிருந்த காலத்தில் ஆட்டம் போட்டதை மனதில் வைத்துக் கொண்டே முதிர்ந்த இந்தக் கால கட்டத்தையும் தனது ஆளுமையில் கோலோச்ச வேண்டுமென்கிற ஆசை, அது பேராசை.. அப்ப , பெருநஷ்டம் அந்தப் பழமொழிக்கொப்பவே வந்துவிடும்..
பாலசந்தருக்கும் பாகியராஜுக்கும் என்ன படமா எடுக்கத் தெரியாது?.. ஜெயகாந்தனுக்கும் இன்னபிற அன்றைய பிரபல எழுத்தாளர்களுக்கும் இன்றைக்கென்ன எழுதவா வராது?.. ஆனால் ஏன் எல்லாரும் அமைதி காக்கிறார்கள்? .. எதையேனும் செய்யபோய், சம்பாதித்து வைத்துள்ள அந்தப் பழைய வீரிய இமேஜும் இசிபட்டுப் போகும் என்கிற ஓர் தீர்க்க தரிசனத்தோடு தான் அவர்கள் அவ்விதம் இருக்கிறார்கள்..
மணிரத்தினம் போல சிலர் ஆட முற்பட்டு, சில துரதிர்ஷ்ட தயாரிப்பாளர்கள் இத்தனை காலம் சேர்த்துவைத்த காசுகளை விரயம் செய்ய வேண்டுமென்கிற விதி.. அதை மாற்ற எவரால் முடியும்?