Saturday, June 15, 2013

tms..

TM.சவுந்தரராஜன்..
அடேங்கப்பா.. எத்தனை எத்தனை பாடல்கள்..!! அவர் பாடுவதற்கு அசையாத வாய்களும்  உண்டோ?..
எம்ஜியார், சிவாஜி, என்கிற இரண்டு மாபெரும் தமிழ் சினிமாவின் சகாப்தங்கள் ... என்னதான் அற்புதமாக நடித்து நடிகர் திலகம் என்றும் புரட்சித் தலைவர் என்றும் பேர் எடுத்தாலும் ஸ்டைலாக அவர்கள் பாடி ஆட ஓர் TMS இல்லை என்றால் அத்தனை உயிரோட்டமாகத் திகழ்ந்திருக்கக் கூடுமா என்றால் அது உண்மையாகவே பதில் சொல்ல முடியாத கேள்வி தான்...

வேண்டுமானால் அவர்கள் இருவரும் இல்லை என்றால் இவருக்கு எங்கே வேலை இருந்திருக்கப் போகிறது என்று இவரது திறமை மீது பொறாமை கொண்டு எவரேனும் உளறி இருக்க முடியுமே ஒழிய... இவர் இல்லை என்றால் அந்த இரண்டு கலைஞர்களும் இப்படி பிரம்மாண்ட விஸ்வரூபம் எடுத்திருக்க முடியாதென்றே நம் எல்லாராலும் உத்திரவாதமாக அடித்து சொல்ல முடியும்.. !!

சிவாஜிக்கென்று ஓர் குரல் மெருகு.. எம்ஜியாருக்கென்று ஒன்று.. இவை போக, பக்தி ரசம் சொட்ட சொட்ட கடவுள் மீதான உருக்கமான பாடல்கள்..

இவரது திறன்களை அடுக்க பிரயத்தனப் பட்டோமேயானால், அது பனை மாதிரி  மிக நெடிதுயர்ந்த விஷயம்.... கடல் மாதிரி அகன்று விரிந்த அதிசயம்..

கடைசி வரைக்கும் எல்லாருக்குமே பாட வேண்டுமென்கிற நோக்கில், இறைவன் இவரை  நீண்ட ஆயுள் வரைக்கும் வைத்திருந்தார் என்றே சொல்லவேண்டும்..

இவரது பாடல்களுக்கு வாயசைக்கிற வல்லன்மை இப்போதைய எந்த நடிகர்களுக்கும் இல்லை.. இவர் பாடல்களுக்கு வாயசைத்தவர்கள் அநேகமாக எல்லாருமே இப்பூவுலகை விட்டு சென்று விட்டனர்.. அவர்களை எல்லாம் அனுப்பி விட்டுப் பொறுமையாக இப்போது தான் இவர் மறைந்து விட்டார்.. இனி மேல் லோகத்தில்  இருக்கிற எவருக்கும் பிரச்சினை இல்லை..

ரம்பை ஊர்வசியோடு ஆடிப் பாட பொருத்தமான குரல் அமையவில்லை என்று ஏங்கித் தவித்துக் கொண்டிருந்த  எவ்வளவோஆத்மாக்களுக்கு  இனி tms வந்து விட்டது  குறித்து மிக்க மகிழ்ச்சி தானே??

No comments:

Post a Comment

நிகர் ...

உந் தன் நிமித்தம்  "ஒருதலைக் காதலன் " தகுதி எமக்கு  சுலபத்தில் வாய்த்தது..  இருதலைப்படுத்தும்  முஸ்த்தீபு எதுவுமற்று  ஏக்...