குற்றம் 23......
================
[திரைப் பட சிறு விமரிசனம்]


ராஜேஷ்குமாரின் நாவலைத் தழுவித் புனையப்பெற்ற இத்திரைப் படம், அவரது நாவலுக்கு மேலும் மெருகூட்டியுள்ளது..
அறிவழகனின் இந்தப் புனைதல், தமிழ் சினிமா கலாச்சாரத்தின் மிக முக்கிய மைல்கல் எனில், அது மிகையன்று..
செதுக்கிவைத்தாற்போன்ற திரைக்கதையும், அதற்கேற்றாற்போன்ற பாத்திரங்களின் பங்களிப்பும், அவர்களின் யதார்த்த உன்னத நடிப்புக்களும் படம் நெடுக சோபை மிளிர்ந்து பார்ப்பவர்களின் இமைகளை பாம்புகள் போன்றே மூடாதிருக்க செய்திருக்கின்றன.. !
எஸ்.ஐ யாக அசத்தியுள்ள அருண்விஜய் ... இத்தனை கால மெனக்கெடல்களுக்குப் பிற்பாடான ஒரு வெற்றியினை சுவைக்க ரசிகர்கள் எல்லாம் ஒத்துழைக்குமாறு வேண்டிவிரும்பிக் கேட்டுக் கொள்கிறேன் ..
அலட்டலில்லாத பின்னணி இசை.. பிரபலமாவதற்கு வாய்ப்பில்லாத ரெண்டொரு பாடல்கள்.. தேவையற்ற இடங்களில் பொருத்தமான மவுனம் என்கிற விதமாக யதார்த்த இசை .. யாரோ ஒரு அறிமுக இசையமைப்பாளர் போலும்.. !
குழந்தையற்றவர்கள் படுகிற மன உளைச்சல், உடல் அயர்ச்சி, சமூகம் அவர்களை பிரித்துவைத்துக் காண்பிக்கிற பாரபட்சம், ...
உதவுகிறேன் என்று வருகிற இதன் வகையறா ஆசுபத்திரிகள் போடுகிற பொய்வேஷங்கள், .... அதன் பின்புலமாக செயல்பட்டு ஆதாயம் தேடுகிற கொள்ளைக்கும்பல் ... என்று தமிழசினிமா இதுவரை காணாத புது தளங்களில் பயணிக்கிறது படம்..
ஒன்றுமில்லாத குப்பைப் படங்களை தலையில் தூக்கிவைத்து ஆடுகிறோம்.. அவைகளுக்கு டீசர் ட்ரைலர் என்று சமூக தளங்கள் அடிக்கிற வெட்டிப் பறைகள் போதுமென்று நினைக்கிறேன்.. இம்மாதிரி அந்தஸ்துள்ள படங்களை மாத்திரம் ப்ரத்யேகமாகக் கொண்டாடப் படவேண்டுமென்று உங்களையெல்லாம் மிகத் தாழ்மையோடு வேண்டிவிரும்பிக் கேட்டுக்கொள்கிறேன்.. நன்றி.. !!