Friday, January 17, 2014

சென்னிமலை தேர்..

நேற்று சென்னிமலை தேர்... அடேங்கப்பா.. என்னா ஒரு தேஜஸ் ஊர் பூரா.. இப்டி ஒரு செ.மலையை முன்னாடி பார்த்ததில்ல.. கல கட்டிடிச்சு ன்னு சொல்றாங்களே.. அதான் இது.. 
ஜன சமுத்ரத்துல நானும் ஐக்கியம்.. முன்னுக்கும் பின்னுக்கும் வலதுக்கும் இடதுக்குமா மக்கள் அலைகள் அலேக்கா தூக்கித் தூக்கி வீச .. ஆனந்த அலையில் சிக்குண்ட பேரானந்தத்தில் எனது பொழுது புதுப்பொலிவு  பெற்றது....!

அதன் பிரத்யேக நிலையை தேர் அடைந்ததும் அதன் மீதாக ஆளாளுக்கு உப்பை வாங்கி அள்ளித் தெளித்தனர்.. எனது மண்டை எங்கிலும் உப்புச் சிதறல்கள்.. என்ன தட்டியும் அங்கொன்றும் இங்கொன்றுமாக உப்புப் பிசிர்கள்.. வீடு வந்தும் கூட விரல்களில் நெருடிய உப்பினை மெல்ல உருவி எடுத்து சுவைத்தேன்.. அந்தக் கரிப்பில் ஓர் சிலிர்ப்பை உணர்ந்தேன்.. 

சிலர் சில்லறையை அள்ளி தேர் மீது தெளித்தனர்.. ஓர் சுவாரசிய ஐதீகம்.. நானும் ஓர் தேர்ந்த பொறுக்கி போல சில்லறை வீசப் படும் போதெல்லாம் குனிந்து அகப்படுமா என மெனக்கெட்டு மெனக்கெட்டு நான்காவது ஐந்தாவது முறை தான் நான்கு ரூபா கெடச்சது.. ஹிஹி.. 

அரிசியைக் கோழி கொத்தக் கூட சற்றே நேரம் பிடிக்கும்.. ஆனால், சில்லறைக் காசு வீசி முடித்த அடுத்த ஷணமே ஒற்றைக் காசைக் கூட நிலத்தில் விடவில்லை  யாரும்.. பொறுக்கறதுல என்ன ஒரு பிரம்மாத வேகம்.. நானும் கூட காசை கீழே போட்டு போட்டு பொறுக்கிப் பழக வேண்டும் இனி .. 

தெருவெங்கும் தேர் பவனி வருகையில் அதனூடே ஜனப் பிரளயம்... காணக் கண் கோடி வேணும்.. ஒவ்வொரு நிலை கடக்கையிலும் சட சட வென பூ உதிர்வது போன்ற கைதட்டல்கள்.. 

எங்க ஊரு தேருக்கு வந்தே தீரணும்னு , சென்னையிலிருந்து.. வெளி மாநிலங்களில் இருந்து எவ்வளவோ சென்னிமலைக் காரப் பசங்களும் பொண்ணுகளும் .. ஐ.டி ..யிலும் இன்னபிற துறைகளிலும் பணியாற்றுகிற யாவரும் அந்தக் கும்பலில் இருந்தனர் என்பதை அவர்களது பரிமாற்றங்களின் போது என்னால் சுலபத்தில் அனுமானிக்க முடிந்தது.... பொறந்த ஊரின் பாசமே பாசம்.. தாய்வீடு வருவது போலவே ஓர் சுகந்த உணர்வு.. 

அந்த லட்சோப லட்ச மனிதர்களிடையே எனக்குள் நிகழ்ந்த ஓர் அனுபவத்தை வார்த்தைப் படுத்த என்ன முயன்றாலும் .. அந்த அனுபவத்தின்  முன்னிலையில் வார்த்தைகள் மிகவும் பலவீனமானவை தான்.. 

அடுத்த ஓர் தேர் நாளை இப்பிருந்தே எதிர்பாக்குற அளவுக்கு ஆசைய வெதச்சிடுச்சு சென்னிமல... அடடே..

4 comments:

 1. நடந்த சிறப்பை நேரில் கலந்து கொண்ட உணர்வு... வாழ்த்துக்கள்...

  ReplyDelete
 2. தேரோட்ட விழாவை சிறப்பாக பகிர்ந்தமைக்கு நன்றி! அது என்ன சில்லரை வீசுதல்! அறியாத செய்தி! நன்றி!

  ReplyDelete
 3. சென்னிமலை தேர்.. Super!

  ReplyDelete
 4. எனது இடுகைக்கான தங்கள் மூவரின் பின்னூட்டங்களுக்கும் மிக்க நன்றி ..இவை போக மின்னஞ்சல் செய்தவர்களுக்கும் நன்றி ..

  ReplyDelete

நிகர் ...

உந் தன் நிமித்தம்  "ஒருதலைக் காதலன் " தகுதி எமக்கு  சுலபத்தில் வாய்த்தது..  இருதலைப்படுத்தும்  முஸ்த்தீபு எதுவுமற்று  ஏக்...