பவித்ரம் ததும்பிய
உமது யெளவனம்..
ப்ராயங்கள் பற்பல
கடந்த பிற்பாடும்
என் மனம் விட்டகலா
தூரிகையாய் வியாபிக்கிறது..
உமது மெருகில்
அன்றாடம் என்னில்
நிகழ்ந்த கிளர்ச்சி ரசாயனம்
எலும்பையே உருக்கும்
வீரியம் கொண்டன எனில்
மிகையன்று.. !!
எவ்வளவு ஜனசந்தடியிலும்
நீ வரும் பாதை---நீயற்று
வெறிச்சோடியே காணும்
----மாயைகளில் உழலப்
பழகிய என் மனதுக்கு.. !
எவருமற்ற பாதையில்
நிந்தன் வருகை என்பது
நெரிசலில் திக்குமுக்காடும்
என்னிதயம்.. !!
ஈவிரக்கமற்ற காலம்
பெரிய இடைவெளி ஒன்றை
வகுத்து .. எதுவுமற்றதாக்கிற்று
எமதற்புத காதலை..
உமது நிமித்தம் எமது காதல்
ஒருதலைப்பட்ச தகுதி மட்டுமே
பெற்றிருந்ததை ஒரு புகார் போன்று
நான் சொல்லலியாக வேண்டும்
இந்த சந்தர்ப்பத்தில்.. !
நீயும் என்போன்றே
என்மீது லயித்திருக்கும் பட்சத்தில்
இன்று காலத்தை குற்றவாளிக்
கூண்டில் நிறுத்தும் தேவை
இருந்திருக்க வாய்ப்பில்லை.. ~~
இன்றைய முதுமையில்
நான் பற்பல பிராந்தியங்களிலும்
கவனிக்கிறேன்..
உன்னைவிட அழகான
பெண்களெல்லாம் ..
என்னைவிட அசிங்கமான
ஆண்களோடு
காதல் சல்லாபம் ஆடுவதைப்
பார்க்கையில்..
என்னை விடாப்பிடியாக
துரத்துகிற துரதிர்ஷ்டங்களை
என்னால் அடையாளம்
கண்டுகொள்ள முடிகிறது
மிக சுலபமாக.. !!