Sunday, April 24, 2011

சாய்பாபாவின் ஆத்மா...

தன் உடன் பிறந்த சகோதர சகோதரிகளுக்கே உதவ யோசித்தும், யோசித்து மறுத்தும் வருகிற மனோபாவத்தில் வாழ்ந்து வருகிற சிறுமை நிரம்பியவர்கள் நாம்... 

ஆனால், சமூக சேவைகளை தனது உயிர்மூச்சாக சுவாசித்து வாழ்ந்து வந்த சத்ய சாய்பாபா அவர்கள் இப்பூவுலகை விட்டு சென்று விட்டார் என்பது மனவேதனைகளையும் தாங்கொணா துயர்களையும் மனசில் பதிய வைத்து விட்டது என்பதில் எந்த விதமான சந்தேகங்களும் இல்லை..

இப்படி ஓர் லக்ஷ்ய புருஷன் இனி இந்தப்பூ உலகிற்கு கிடைப்பாரா என்பது துயர் நிரம்பிய கேள்வியாகும்... ஏதேனும் பம்மாத்து பண்ணி , அந்த இருக்கையில் மற்றொரு நபர் அமரக்கூடும்...நான் தான் சாய்பாபாவின் மறுபிறவி என்று ஓர் டுபாக்கூர் விடக்கூடும், அதனை செல்லுபடி கூட செய்துவிடுவார்கள்..

ஆனால் அந்த நபர் இவர் போல ஓர் கருணை வள்ளலாக இருப்பாரா, மக்கள் சேவையில் திளைப்பாரா என்பதெல்லாம் மில்லியன் டாலர் கேள்விகள்... 

சுயநலம் மாத்திரமே எங்கெங்கிலும் ஏகோபித்து படர்ந்து கிடக்கிற இந்தப்ப்ரபஞ்சத்தில் , தயாள சிந்தனைகள் கடுகளவு கூட எவர் வசமும் துளிர்ப்பதில்லை என்பதோடு, அவ்விதம் சாதிப்பவர்களைக்கூட தடுத்து நிறுத்தி சாதிப்பவர்கள் தான் இந்த எதார்த்த உலகில் இருந்து வருகின்றனர்..

சாய்பாபா போலவே பிறர்க்கு கொடுத்து உதவும் மனப்பாங்கும், அதனை வழி நடத்தவும் இனி நபர்கள் முளைக்க வேண்டுமானால், அது அந்த சாய் பாபாவின் ஆத்மா மாத்திரமே செயல் படுத்தக்கூடிய ஒன்றென்றே தோன்றுகிறது...

சாய்பாபாவின் ஆத்மா...

No comments:

Post a Comment

நிகர் ...

உந் தன் நிமித்தம்  "ஒருதலைக் காதலன் " தகுதி எமக்கு  சுலபத்தில் வாய்த்தது..  இருதலைப்படுத்தும்  முஸ்த்தீபு எதுவுமற்று  ஏக்...